மேலும் அறிய

மழை பிடிக்காத மனிதன் படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - இயக்குநர் விஜய் மில்டன் பரபரப்பு பேட்டி

மழை பிடிக்காத மனிதன் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தனக்கே தெரியாமல் படத்தில் ஒரு நிமிட காட்சி இணைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உலா வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் இன்று திரையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமாகிய விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.

எனக்கே அதிர்ச்சி:

இந்த நிலையில், படத்தின் இயக்குனரான விஜய் மில்டன் பரபரப்பான பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மழை பிடிக்காத மனிதன் படத்தை பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து பார்க்க வேண்டும் என்று பார்த்தேன். இந்த படத்தில் இந்த ஹீரோ யார்? இவன் ரவுடியா? இவன் டாக்டரா? இவன் எங்கே இருந்து வந்தவன்? அப்படி கேள்விகளை வைத்தே படம் எழுதியிருக்கேன்.

மர்மமா ஒரு மனிதன் வர்றான்? அவன் கூட வர்ற சரத்குமார் யாரு? இது பின்னாடி என்ன கதை இருக்கிறது? திடீர்னு சென்னையில் ஒரு அமைச்சரை தேடுகிறார்கள்? இவனை காப்பாத்த வர்றவங்க யாரு? இவனைத் தேடி வர்றவங்க யாரு?  இதை வைத்துதான் கதை பண்ணியுள்ளோம். ஆனால், படம் பாக்கும்போது எனக்கே ஷாக்கா இருந்தது.

எனக்கே தெரியாமல் 1 நிமிட காட்சி:

படத்துக்கு முன்னாடி 1 நிமிடத்திற்கு ஒரு வரும் காட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது நான் வைக்கவில்லை. அது எப்படி வந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. அந்த காட்சியில் அவன் யார்? அதன் பேக்ஸ்டோரி என்ன? என்பதை தெளிவாக சொல்லிட்டாங்க. அதை சொல்லிட்டா படம் எப்படி பார்க்கிறது? அதுக்குத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டோம்.

இப்படி ஒரு காட்சி வருகிறது என்றால் அதற்கு ஏற்றாற்போல நான் திரைக்கதை எழுதியிருப்பேன். எடுத்து முடித்த  படத்தில் சென்சார் வாங்கிய படத்தில் இப்படி ஒரு காட்சியை சேர்க்கும் உரிமையை யார் கொடுத்தார்கள்?என்பது தெரியவில்லை. ஒரு இயக்குனரை கேட்காமல் ஒரு நிமிட காட்சியை சேர்த்து ஒரு படத்தை காலி செய்கிறார்கள்,

வேண்டுகோள்:

தயவு செய்து ஒரு நிமிடத்தை மறந்துவிட்டு படத்தை பாருங்கள். அதை சொல்லிவிட்டால் நான் யார்? யார்? என்று சின்ன சின்ன மர்மமாக படம் செய்துள்ளேன். அதை ஓபன் பண்ணிவிட்டால் எல்லாரும் கையை கட்டிவிட்டு படம் பார்ப்பார்கள். நான் அதில் ஆழமாக போக விரும்பவில்லை. தயவு செய்து உங்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். படத்தில் முன்னால் வரும் ஒரு நிமிடத்தை மறந்துவிட்டு படத்தை பாருங்கள். அது நான் சேர்க்கவில்லை. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை லலிதா, பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சத்யராஜ், சரத்குமார், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Embed widget