மேலும் அறிய

Mark Antony Trailer: ’கேங் ஸ்டார்னா டிசிப்ளின் வேணும்’ டார்க் காமெடி கன்ஃபார்ம்; கார்த்தி குரலில் வெளியான மார்க் ஆண்டனி ட்ரைலர்

Mark Antony Trailer: மார்க் ஆண்டனி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால் கடைசியாக லத்தி சார்ஜ் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவரின் அடுத்தப்படமாக மார்க் ஆண்டனி தயாராகி உள்ளது. இந்த படத்தை த்ரிஷா இல்லானா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன், அசராதவன் படங்களை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். 

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிகை ரிது வர்மா ஹீரோயினாகவும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில் குமார், செல்வராகவன், அபிநயா, ரெட்டின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
டைம் டிராவலை தொலைபேசி வழியாக நடக்கும் காட்சிகளாக கதை அமைக்கப்பட்டுள்ளது. 

மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படியான நிலையில் ரிலீசுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து மார்க் ஆண்டனி படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இதில் இன்று அதாவது செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியானது. ட்ரைலர் நடிகர் கார்த்தி குரலில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க கேங் ஸ்டார் கதைக்களத்தை கொண்டு உருவக்கப்பட்டுள்ள டார்க் காமெடி திரைப்படமாக இருக்கும் என்பதினை ட்ரைலர் விளக்குகிறது. 

படத்தின் இரண்டாவது பாடலாக  ‘ஐ லவ்யூடி’ நேற்றி வெளியானது. ரோகேஷ் உடன் இணைந்து பாடலை எழுதியுள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரோஷினியுடன் இந்த பாடலை  பாடியுள்ளார். இப்பாடல் காதல் தோல்வி பாடலாகவும் அமைந்துள்ளது. 

 இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ‘பஜாரி, மூடு வரல’ என மோசமான வார்த்தைகளுடன், ரிது வர்மாவை நைட்டியுடன் ரோட்டில் ஆட வைக்கும் காட்சிகளும் வெளியாகியது.  மேலும் இந்த பாடல் வரிகள் அடங்கிய வீடியோவின் கடைசியில் ரிது வர்மா விஷால் மீது பைக்கை ஏற்றுவது போல வந்து நிறுத்துகிறார். உடனே விஷால், ‘நல்லவேளை என் அனகொண்டாவுக்கு ஒண்ணும் ஆகல’ என சொல்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் விஷாலை ‘அனகொண்டா’ என சரமாரியாக ரசிகர்கள் விமர்சித்தனர். இப்படியான நிலையில் தன்னை தானே விஷால் ட்ரோல் செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget