‛இந்தியில் பார்க்கவில்லை... தமிழில் பார்த்து விட்டு...’ நெஞ்சுக்கு நீதியை சிலாகித்த ‛வீரதமிழச்சி’ ஜூலி!
Nenjukku Neethi : எதார்த்தமான கதை களத்தில், எதிர்பாராத கதாபாத்திரத்தில் உதயநிதி சிறப்பாக நடித்திருந்தார். உண்மையாகவே அவரை நான் வணங்குகிறேன்.
உதயநிதி நடித்து, அருண்காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நேற்று வெளியானது. ஏற்கனவே இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற படத்தின் ரீமேக் என்பதால், படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. அதை நிறைவேற்றும் விதமாக, படத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நெஞ்சுக்கு நீதி விஐபி ஷோ திரையிடப்பட்டது. அதில் பல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் முக்கிய பிரமுகராக, ஜல்லிக்கட்டு ‛வீரத்தமிழச்சி’ மற்றும் பிக்பாஸ் புகழ் ஜூலி கலந்து கொண்டு படத்தை பார்த்தார் . படம் பார்த்தபின் வெளியே வந்த அவர், தனது அனுபவத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இதோ அவரது செய்தியாளர் சந்திப்பு...
‛‛நெஞ்சுக்கு நீதி படம் பார்ப்பதற்கு வந்தேன். ஒவ்வொரு படமும் மனதில் ஒவ்வொரு விசயத்தை பதிவு செய்ய வைக்கும். ஒரு படத்தை வைத்து தான், வாழ்க்கையில் நிறைய விசயங்களை நாம் நினைத்து பார்ப்பது உண்டு. அப்படியொரு படமாக தான், இந்த படத்தை பார்க்கிறேன். இந்தியில் நான் பார்க்கவில்லை.; அதனால் எனக்கு தெரியவில்லை. முதல் முறை தமிழில் நான் பார்க்கும் போது, எதார்த்தமான கதை களத்தில், எதிர்பாராத கதாபாத்திரத்தில் உதயநிதி சிறப்பாக நடித்திருந்தார். உண்மையாகவே அவரை நான் வணங்குகிறேன். இது மாதிரியான படத்தில் அவர் நடித்ததற்காக, அவரை வாழ்த்துகிறேன்.
மக்களுக்கு தேவையான, சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களைக் கொண்ட கதையை படமாக்கும் ஒருவராக உதயநிதியை நான் பார்க்கிறேன். இந்த படத்தை இயக்கிய அருண்குமார் காமராஜ் சார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஆரி அண்ணன் மற்றும் சுரேஷ் தாத்தா ஆகியோர் தனித்துவமாக நடித்துள்ளனர். ஆர்டிக்கல் 15 என்றால் என்ன என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் கதை. உணர்வுபூர்வமாக நம்மை இணைத்து, உறங்கும் போது வரை இந்த படத்தின் நினைவுகள் இருக்கும். மொத்த அணிக்கும் வாழ்த்துக்கள். நல்ல படம் பார்த்த திருப்தி அனைவருக்கும் இருக்கும்.
இதே போல, விஐபி ஷோ பார்த்த மற்றொரு பிக்பாஸ் பிரபலமும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், சர்ச்சை குறிய கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த கருத்து...
‛இந்துக்களிடம் ஒற்றுமை வேண்டும் என்கிறது நெஞ்சுக்கு நீதி...’ விஐபி ஷோ பார்த்த காயத்ரி ரகுராம் அதிர்ச்சி கருத்து!#NenjukkuNeethi #UdhayanidhiStalin #KayathriRaguram #BJP #DMK #ABPNaduhttps://t.co/RhJsmvySbD
— ABP Nadu (@abpnadu) May 21, 2022