![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Manjummel Boys: ரஜினிகாந்த் படத்தை ஓவர்டேக் செய்து ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ்!
Manjummel Boys: ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17.5 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
![Manjummel Boys: ரஜினிகாந்த் படத்தை ஓவர்டேக் செய்து ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ்! manjummel boys movie joins in 100 cr club box office collection overtakes rajinkanth starring lal salaam Manjummel Boys: ரஜினிகாந்த் படத்தை ஓவர்டேக் செய்து ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/3155d870236bb67b77a5eaf3298a6c491709617761200574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபிஸில் இணைந்து இமாலய சாதனை படைத்துள்ளது.
அரங்கு நிறைந்த காட்சிகள்
மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில், சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் இயாக்கத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. நேரடி மலையாள சினிமாவான இப்படம் கமல்ஹாசனின் குணா படத்தின் ரெஃபரன்ஸ், மற்றும் குணா குகையில் எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட காரணங்களாலும், விறுவிறு திரைக்கதையாலும் மலையாள ஆடியன்ஸ் தாண்டி தென்னிந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழில் தற்போது வெளியாகியுள்ள கோலிவுட் படங்கள் தாண்டி திரையரங்குகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில், அரங்கு நிறைந்த காட்சிகளாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பினைப் பெற்று வருகிறது. முன்னதாக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு வாழ்த்து பெற்ற நிலையில், உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பிற நட்சத்திரங்களையும் சென்னை வந்த படக்குழு சந்தித்தது.
தமிழ் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி
இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ள தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிதம்பரம், மஞ்சும்மல் பாய்ஸ் ரூ. 100 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த அன்புக்கு ஆடியன்ஸூக்கு நன்றி, தமிழ் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி” என உணர்வுப்பூர்வமாக இயக்குநர் சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.
மிகக்குறைந்த பட்ஜெட்டில் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17.5 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லால் சலாமை ஓவர்டேக் செய்த மஞ்சும்மல் பாய்ஸ்
சென்ற பிப்.9ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லால் சலாம் திரைப்படம், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும் சுமார் 80 முதல் 90 கோடி ரூபாய் செலவில் உருவான லால் சலாம் திரைப்படம் இந்தியாவில் வெறும் 15.35 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் Sacnilk தளம் பகிர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த பிப்.22ஆம் தேதி வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் சூப்பர் ஸ்டாரும் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னருமான ரஜினிகாந்த் படத்தின் வசூலைக் கடந்து தமிழ்நாட்டில் சாதனைப படைத்து கோலிவுட் வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)