Watch Video: பாணி பூரியில் மிராண்டா… முகம் சுழிக்கும் வினோத காம்பினேஷன்; வீடியோ வைரல்!
மிராண்டா பாட்டிலை குலுக்கி, பின்னர் அதை ஒரு பெரிய பானையில் மாற்றுவதைக் காணலாம்.
![Watch Video: பாணி பூரியில் மிராண்டா… முகம் சுழிக்கும் வினோத காம்பினேஷன்; வீடியோ வைரல்! Man makes Mirinda golgappa in viral video from Jaipur. Internet is disgusted Watch Video: பாணி பூரியில் மிராண்டா… முகம் சுழிக்கும் வினோத காம்பினேஷன்; வீடியோ வைரல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/1fc4c2efc0cc619dd4b84146552826cd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வினோதமான உணவு காம்பினேஷன்களை மக்கள் முயற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவிடும். ஃபேன்டா மேகி, ஃபயர் மோமோ மற்றும் ஓரியோ பக்கோடா போன்ற பல வித்தியாசமான உணவுகள் நெட்டிசன்களின் கவனத்தை இதுவரை ஈர்த்துள்ளன. பாணி பூரியை விரும்பி உண்பதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. நம் ஊரிலும் கூட இந்திக்காரர்கள் போட்டிருக்கும் பாணி பூரி கடைகளை சுற்றி வட்டமாக எப்போதும் ஒரு கூட்டம் குட்டி கிண்ணத்துடன் நிற்பதை காண முடியும். ஆனால் அத்தனை பாணி பூரி காதலர்களையும் முகம் சுழிக்க செய்யும் வித்தியாசமான விடியோ வைரல் ஆகி இருக்கிறது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் மிராண்டாவில் பாணி பூரி தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Watch Video| திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையை புரட்டியெடித்த உறவினர்கள்.. அதிரவைத்த காரணம்..
View this post on Instagram
Watch Video: ரங்கன் வாத்தியாரைப் பாராட்டிய அஸ்வின்.. ரிக்கி பாண்ட்டிங்கை புகழ காரணம் என்ன?
இன்ஸ்டாகிராமில் சாடோர் பிரதர்ஸ் என்ற பேஜில் வெளியிடப்பட்டு இப்போது வைரலாகி உள்ள வீடியோவில், பாணி பூரி விற்கும் நபர் மிராண்டா பாட்டிலை குலுக்கி, பின்னர் அதை ஒரு பெரிய பானையில் மாற்றுவதைக் காணலாம். பூரிகள் உருளைக்கிழங்கால் நிரப்பப்பட்டிருந்தன, விற்பனை செய்பவர் அதை மேலும் கேஸ் கொண்ட மிராண்டா பானத்தால் நிரப்பினார். வீடியோவின் தலைப்பின்படி, ஜெய்ப்பூரில் உள்ள கோல்கப்பா அஃபேர்ஸில் மிராண்டா பாணி பூரி கிடைக்கிறது.
Watch Video | விடுங்கய்யா.. நான் போறேன்: க்யூட்டாக தப்பிக்கும் பாண்டா - வைரல் வீடியோ!
Watch Video | `கலைஞன்!’ - விஜய் சேதுபதியின் வித்தியாசமான, கலக்கல் ஃபோட்டோஷூட்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ ஆன்லைனில் வெளியிடப்பட்ட பிறகு, 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்தது. நெட்டிசன்கள் வித்தியாசமான கலவையால் முற்றிலும் வெறுப்படைந்தனர் மற்றும் கமென்ட் பாக்சில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பலர் கமென்டில் "நான்சென்ஸ்", "டிஸ்கஸ்டிங்" போன்ற வார்த்தைகளை எழுதியிருந்தனர். பல கமெண்டுகள் முகம் சுழிக்கும் எமோஜிக்கள் கொண்டிருந்தன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)