Watch Video | `கலைஞன்!’ - விஜய் சேதுபதியின் வித்தியாசமான, கலக்கல் ஃபோட்டோஷூட்.. வைரல் வீடியோ!
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் தன்னுடைய ஃபோட்டோஷூட்டில் இருந்து புதிய வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் தெருக்கூத்துக் கலைஞர் வேடத்தில் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் தன்னுடைய ஃபோட்டோஷூட்டில் இருந்து புதிய வீடியோக்களைப் பதிவிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி தெருக்கூத்துக் கலைஞர் வேடத்தில் நடித்துள்ளார். 10 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி இதுவரை யாரும் பார்க்காத தெருக்கூத்துக் கலைஞர் லுக்கில் இருக்க, அவரைப் புகைப்படக் கலைஞர் ராமசந்திரன் படம் எடுப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பதிவு நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்களிடமும், அவரைப் பின்தொடர்பவர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
வரும் 2022ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி இரு பெரிய திரைப்படங்களில் தென்படவுள்ளார். காதல், காமெடி என்ற வகையில், விஜய் சேதுபதி நடிக்கும் `காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளிவரவுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இதில் கதாநாயகிகளாக நடிகைகள் நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். வரும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்திற்கு அனிருத் பின்னணி இசையை அமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு திரைப்படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் `விக்ரம்’. ஆக்ஷன் த்ரில்லர் பாணியிலான இந்தப் படத்தில் கமல் ஹாசன், ஃபஹத் ஃபாசில் ஆகிய பெரிய நடிகர்களும் நடித்துள்ளனர். மேலும், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ் முதலானோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். இது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram