மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. உடல்நிலை எப்படி இருக்கு?
கொச்சியில் உள்ள மருத்துவமனையில் மலையாள நடிகர் மோகன்லால் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் காய்ச்சல், மூச்சு திணறல், தசை வலி உள்ளிட்டவற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
![மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. உடல்நிலை எப்படி இருக்கு? Malayalam actor mohanlal admitted in a hospital in Kerala following complaints breathing difficulty மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. உடல்நிலை எப்படி இருக்கு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/6908fed8d3d1b8846e744a670661aca81723974251906729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக்குறைவு காரணமாக மலையாள நடிகர் மோகன்லால் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் காய்ச்சல், மூச்சு திணறல், தசை வலி உள்ளிட்டவற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். சுவாச தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை அடுத்த 5 நாள்களுக்கு உட்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
யார் இந்த மோகன்லால்?
உலகளவில் மலையாள சினிமாவிற்கென்று தனி இடம் உண்டு. அந்த மலையாள திரையுலகம் தந்த சிறந்த நடிகர்களில் மோகன்லாலுக்கு தனி இடம் உண்டு.
லாலேட்டன் என்று செல்லமாக ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லாலை நடிகராகவும் சினிமாவில் பன்முக கலைஞராகவும் திகழ்கிறார். ஆனால், அவர் ஒரு சிறந்த மல்யுத்த வீரர் ஆவார். சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டது போலவே மல்யுத்தம் மீதும் தீராத ஆர்வம் கொண்ட இளைஞராகவே உலா வந்துள்ளார் மோகன்லால். அதற்காக தீராத பயிற்சியும், உடல் தேகத்தையும் வளர்த்துக் கொண்டவர்.
பின்னர், மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். தொடக்கத்தில், பிரேம் நசீர், சுகுமாறன், நெடுமுடி வேணு, மம்மூட்டி என பல ஹீரோக்களுடன் துணை கதாபாத்திரத்திலே மோகன்லால் நீண்ட வருடங்கள் நடித்து வந்தார்.
Breaking news 😟 #Mohanlal @Mohanlal sir admitted to #AIMS hospital due to high fever and breathing problem wishing him speedy recovery ❤️🩹 pic.twitter.com/TZ3zQin7fs
— mad max (@targariyan) August 18, 2024
பின்னர், கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். மலையாள சினிமா மட்டுமின்றி உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் மோகன்லால்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)