ரஜினி அமிதாப் ரெண்டு பேருக்கும் நடிக்கத் தெரியாது...மலையாள நடிகர் சர்ச்சை பேச்சு
ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இருவருக்கும் நடிக்கத் தெரியாது என பிரபல மலையாள நடிகர் அலென்சியர் லே லோபெஸ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும் ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. த.செ ஞானவேல் இயக்கிய இப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , துஷாரா , ரித்திகா சிங் , ரானா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க ஆக்ஷன் மாஸ் என இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதே நேரம் ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையிலான ஒரு படமாக இருந்தது வேட்டையன். ஆனால் வசூல் ரீதியாக இப்படம் எதிர்பார்த்த வசூலை எடுக்கவில்லை.
ரஜினி மற்றும் அமிதாப் பச்சனுக்கு நடிக்க வராது
வேட்டையன் படத்தில் பிரபல மலையாள நடிகர் அலென்சியர் லே லோபெஸ் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பு அவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையன் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசிய அவர் " வேட்டையன் படத்தில் எனக்கு நடிக்க அழைப்பு வரும்போது நான் தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செல்லவில்லை. இந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக நான் வாங்கவில்லை. மும்பைக்கு ஒரு ஃபிளைட் டிக்கெட் போட்டுக் கொடுத்தார்கள். பிறகு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் கொடுத்தார்கள். நீதிபதியாக ஒரே ஷாட்டில் நான் உட்கார்ந்திருக்க வேண்டும். ரஜினி மற்றும் அமிதாப் பச்சம் ஆகிய இருவரும் எப்படி நடிக்கிறார்கள் என்பதை பார்க்கவே நான் சென்றேன். ஒருபக்கம் ரஜினிகாந்த் தனது தனித்துவமான ஸ்டைலில் நடந்து வருவார். அவருக்கு அடுத்து அமிதாப் பச்சன் சிங்கம் மாதிரி பேசுவார். இவர்களுடன் என்னால் போட்டி போட முடியாது என்பதை அப்போதுதான் நான் தெரிந்துகொண்டே. அதே நேரத்தில் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இருவருக்கும் நடிக்க வராது என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். இதை சொல்வதால் எனக்கு இனிமேல் தமிழில் எந்த பட வாய்ப்பும் வராது என்பது தெரிந்துதான் சொல்கிறேன். நேர்மையாக என் மனதிற்கு பட்டதை சொல்கிறேன்" என அவர் கூறியுள்ளார்
கோலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த இரு பெரும் நடிகர்களைப் பற்றி இப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

