Malavika Mohanan:‘செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல’ : மாளவிகாவை மீம்ஸ்போட்டு கலாய்க்கும் இணையவாசிகள்!
Malavika Mohanan: பிரபல நடிகை மாளவிகா மோகனன், கிரிஸ்டி எனும் மலையாள படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, அவர் குறித்த இரட்டை அர்த்த மீம் ஒன்று வைரலாக பரவியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திலும் நாயகியாக வந்து, ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். மாளவிகா, தற்போது கிரிஸ்டி எனும் மலையாள படத்தில் மாத்யூ என்ற நடிகருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின், போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஒரு ரசிகர் மாளவிகாவின் பழைய படத்தையும், கிரிஸ்டி போஸ்டரையும் இணைத்து “மாத்யூ இதை எப்படி சமாளிக்கப்போகிறாரோ…” என்று இரட்டை அர்தத்தில் ட்வீட் செய்திருந்தார்.
I Am Tensed Wondering How Mathew Will Handle It!😢#MalavikaMohanan pic.twitter.com/pL4FaXyPz7
— Athul (@Athulyokzz_) January 18, 2023
மாளவிகாவின் பதில்
ரசிகரின் ‘அந்த’ டவீட் வேகமாக பரவ, மாளவிகா மோகனன் அதற்கு உடனே ஒரு ரிப்ளை ட்வீட்டை வெளியிட்டார்.
He handled it really well
— malavika mohanan (@MalavikaM_) January 18, 2023
அதில், ‘மாத்யூ அதை நன்றாகவே சமாளித்தார்’ என அந்த ட்வீட்டில் கூறியுள்ளார். இதையும் விடாத இணையவாசிகள், ‘பாத்தியா..செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல’ என அந்த ட்வீட்டை ஸ்கீரின் ஷாட் எடுத்து அதற்கும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
வைரலாகும் மீம்ஸ்கள்:
https://t.co/Noq60BnaUT pic.twitter.com/cGbn1aUP5i
— Gautam! (@gautamoffcl) January 18, 2023
Paathayaa, chellathuku edhumae therila. https://t.co/KR29XOX5Sq
— a (@0x403f4021) January 18, 2023
https://t.co/vXztG2k3iM pic.twitter.com/5YFyk4Zv1M
— 🕊 புதியபறவை 🕊 (@MigaMike) January 18, 2023
ஆரம்பத்திலிருந்தே, தனது ட்விட்டர் பக்கத்திற்கு வந்து தன்னைப் பற்றி நகைச்சுவை அல்லது இரட்டை அர்த்த வகையில் கமெண்ட் அல்லது மீம்ஸ் பதிவிடுவோருக்கு தகுந்த பதிலடி கொடுப்பார், மாளவிகா. அது போலத்தான், இந்த முறையும் பதிலடி கொடுத்தார். ஆனால் அதுவே அவருக்கு பேக்ஃபையர் ஆகி, மீம் கிரியேட்டர்களுக்கு கண்டென்டாக மாறிவிட்டது.
மாளவிகாவின் அடுத்தடுத்த படங்கள்..
தமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடித்துவிட்ட மாளவிகாவிற்கு, மவுசு தொடர்ந்து ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. பேட்ட படத்தையடுத்து இவர் நடித்த மாஸ்டர் படமும் உச்சம்தொட, அடுத்தடுத்து பெரிய பெரிய ஹீரோக்களுடன் இணையும் வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார், மாளவிகா. யுத்ரா எனும் படம் மூலம், பாலிவுட்டிற்குள்ளும் எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு வேலைகளும் நடைப்பெற்று வருகின்றன. இந்த ஆண்டிற்குள் தங்கலான் மற்றும் யுத்ரா ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.