Mahesh Babu : புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கியாச்சு... வைரலாகும் மகேஷ் பாபு ஸ்ரீலீலா நடனமாடி அசத்தியுள்ள பாடல்
மகேஷ் பாபு நடித்து உருவாகியுள்ள குண்டூர் காரம் படத்தின் பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது

குண்டூர் காரம்
சர்காருவாரி திரைப்படத்தைத் தொடர்ந்து குண்டூர் காரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் அருகில் ஜன்வாடாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக பூஜா ஹெட்கே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு பின் அவர் படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.தற்போது இந்தப் படத்தில் மகேஷ் பாபுவிற்கு கதாநாயகியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
பூஜா ஹெட்கே நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலா என்பவரும் இரண்டாவது கதாநாயகியான மீனாக்ஷி செளத்ரியும் நடிக்க இருக்கிறார்கள். குண்டூர் காரம் படத்தின் முதல் பாடலான குர்ச்சி மடதபெட்டி பாடல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தில் இருந்து தம் மசாலா என்கிற பாடல் வெளியாகிய நிலையில் தற்போது இந்தப் பாடல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சாஹிதி சகந்தி ஸ்ரீகிருஷ்ணா உந்த பாடலை பாடியுள்ளார்கள். குத்துப் பாடலாக இடம்பெற்றுள்ள இந்த பாடலில் மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீலீலா குத்தாட்டம் போடு காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த ஆண்டு முடியும் தருவாயில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
Here's #KurchiMadathapetti 🔥https://t.co/90H92oZabk@sreeleela14 #TrivikramSrinivas @MusicThaman @Meenakshiioffl @vamsi84 @manojdft @NavinNooli #ASPrakash @haarikahassine @adityamusic #GunturKaaramOnJan12th
— Mahesh Babu (@urstrulyMahesh) December 30, 2023
சர்கார் வாரி படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெய்லர் வெளியாகும்போது அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். முன்னதாக மகேஷ் பாபு நடித்து வெளியான சர்கார் வாரி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒரே நாளில் 26.77 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது.
மேக்கிங் வீடியோ
Current status🚨
— Maharashtra MBFC (@MHMaheshFC) December 31, 2023
8M views with 310k likes
Less than 3 hours left spread the link maxhttps://t.co/C0ixE6gFKz #WeDemandRecordReleaseForGK #KurchiMadathapetti #GunturKaaram pic.twitter.com/8ZSeMWfHPf
ஒரு பக்கம் குண்டூர் காரம் படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் மறுபக்கம் இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவும் படக்குழு சார்பில் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலுக்கு மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீலீலா நடனம் பயிற்சி செய்யும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

