Watch video : இவர்தான் சூர்யா, என்னுடைய நெருங்கிய நண்பர்... நம்பி நாராயணிடம் அறிமுகப்படுத்திய மாதவன்!
ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் படப்படிப்பு தளத்தில் நடிகர் சூர்யாவை நம்பி நாராயணிடம் அறிமுகப்படுத்திய வீடியோவை தனது நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சாக்லெட் பாய் என்ற அந்தஸ்தோடு வலம் வந்த நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கியுள்ளார். படத்திற்கு ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நம்பி நாராயணனாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே செய்திருக்கிறார். மாதவனுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் படப்படிப்பு தளத்தில் நடிகர் சூர்யாவை நம்பி நாராயணிடம் அறிமுகப்படுத்திய வீடியோவை தனது நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோக்கு மேல் கேப்சனாக “என் தம்பியான நடிகர் சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணரவைக்கவும் நடந்துகொள்ளவும் முடியும்.. நம்பி சார் என் தம்பி சூர்யாவிற்கும், அவருடைய அப்பா சிவகுமாருக்கும் மிகப்பெரிய ரசிகர்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், நடிகர் சூர்யா மற்றும் விண்வெளிப் பொறியாளர் நம்பி நாராயணன் அருகில் நின்று ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துவைத்த மாதவன், இவர்தான் சூர்யா என்னுடைய மிக நெருக்கமான நண்பர் என நம்பி நாராயணிடம் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சூர்யாவும், ஷாருக்கானும்..
முன்னதாக படம் குறித்து பேசிய மாதவன், நடிகர்கள் சூர்யா, ஷாருக்கானுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். குறிப்பாக இருவருமே ஒரு ரூபாய்கூட சம்பளம் பெறாமல் இப்படத்தில் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய மாதவன், ராக்கெட்ரி திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஷாருக்கான், சூர்யா இருவருமே ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை. கேரவன்கள், உடைகள், உதவியாளர்கள் என எதுக்குமே அவர்கள் சம்பளம் வாங்கவில்லை.
அனைத்தையுமே அவர்கள் சொந்த செலவில் செய்துகொண்டார்கள். மும்பையில் நடைபெற்ற ஷூட்டிங்குக்கு சூர்யா சொந்த செலவில் விமானம் ஏறி வந்தார். விமான டிக்கெட்டுக்கான காசைக் கூட அவர் வாங்கவில்லை. சினிமா உலகத்தில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். நான் வெளியில் இருந்து சினிமாவுக்குள் வந்தவன் . மக்கள் எனக்கு பல உதவிகளை செய்துள்ளனர். நான் வேண்டுகோள் விடுத்தேன் என்பதற்காக படத்தை ஆதரித்து அமிதாப்பச்சனும், பிரியங்கா சோப்ராவும் ட்வீட்செய்தனர் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்