Maaveeran: பிரம்மாண்டமாக நடைபெறும் ‘மாவீரன்’ ப்ரீ -ரிலீஸ் விழா... விரைவில் ட்ரெய்லர்.. மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் ஜூலை 14ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாக உள்ளது.

மாவீரன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா வரும் ஜூலை 2ஆம் தேதி நடக்க உள்ளது.
ப்ரின்ஸ் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாக உள்ளது.
மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் மாவீரன். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா வரும் ஜூலை 2ஆம் தேதி சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய் கல்லூரியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின், யோகிபாபு, சரிதா ஆகியோரின் ஆஃப்ஸ்க்ரீன் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதற்கான முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
View this post on Instagram
மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் இரண்டாவது பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலை சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளது.
மேலும் இப்படத்தின் டைட்டில் டீசரும் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'எதிர்த்து நின்றான்' எனும் கேப்ஷனுடன் சிவகார்த்திகேயன் படங்களுடன் கூடிய காமிக்ஸ் வரைபடங்களும் இந்த டீசரில் காணப்பட்டன.
இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

