மேலும் அறிய

Maaveeran First Single: சீனா... சீனா... சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!

மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான சீனா சீனா பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன், மண்டேலா படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் இணைந்துள்ள படம் ’மாவீரன்’. ப்ரின்ஸ் படத் தோல்விக்குப் பிறகு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்

அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார். மண்டேலா படத்துக்கு இசையமைத்து கவனமீர்த்திருந்த இசையமைப்பாளர் பரத் சங்கர் மாவீரன் படத்துக்கும் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி இந்தப் படத்தின் ’சீனா... சீனா...’எனும் முதல் இன்று பாடல் ரிலீசாகியுள்ளது.  இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் சிஎம். லோகேஷ் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் ஷோபி கொரியாகிராஃப் செய்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் துள்ளலான நடன அசைவுகளுடன் இப்பாடல் வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலைக் கேட்க இங்க க்ளிக் செய்யுங்க...

சிவகார்த்திகேயன் பிறந்த நாள்

சிவகார்த்திகேயன் இன்று (பிப்.17) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவரது பிறந்தநாள் பரிசாக இப்பாடலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

2012ஆம் ஆண்டு ’மெரினா’ படம் மூலம் சின்னத்திரை டூ வெள்ளித்திரை கால் பதித்த நடிகர் சிவகார்த்திகேயன், குறுகிய காலத்துக்குள் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் 11 ஆண்டு திரை வாழ்வை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் முன்னதாக மாவீரன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி வீடியோ பகிர்ந்திருந்தனர்.

சிவகார்த்திகேயன், அதிதி தவிர்த்து இயக்குநர் மிஷ்கின், நடிகை சரிதா, யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள்

மேலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பான இப்படம் அமையும் என்றும், இப்படத்துக்காக அதி நவீன மோகோபாட் புகைப்படக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக இது போன்ற கேமராவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' திரைப்படத்துக்காக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

மேலும்,  யசோதா புலி முருகன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் மாவீரன் படத்துக்காக சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

சென்னை ஈசிஆரை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடலும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.  மேலும் இந்த ஆண்டு சம்மர் விடுமுறைக்கு இப்படம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தலைப்பு செய்திகள்

"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!
24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!

வீடியோ

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget