மேலும் அறிய

Vairamuthu: வேட்டையன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மறுநாளே பாட்ஷாவை நினைவு கூறிய வைரமுத்து! குழம்பும் ரசிகர்கள்!

ரஜினியின் பாட்சா படத்திற்கு பாடல் எழுதியது குறித்து பாடலாசிரியர் வைரமுத்துவின் எக்ஸ் பதிவு ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

வேட்டையன்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி  , ரக்‌ஷன் உள்ளிட்டவகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வேட்டையன் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. வேட்டையன் ஆடியோ லாஞ்ச் முடிந்த அடுத்த நாளே பாடலாசிரியர் வைரமுத்து ரஜினியின் பாட்சா படத்திற்கு பாடல் எழுதிய அனுபவத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாட்சா பட அனுபவங்களை பகிர்ந்த வைரமுத்து

”பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத அழைத்தார்கள் ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்’ என்றார் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ‘முழுப்படத்துக்கு 50ஆயிரம்’ என்றேன். அதிர்ச்சியானவர் நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கினார். ‘பாடலாசிரியருக்கு இவ்வளவு பணமா? நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம்’ என்றார். ‘இப்போது நான்வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன்; அப்புறம் உங்கள் முடிவு’ என்றேன். ‘பாடல் எழுதுங்கள்; பார்க்கலாம்’ என்றார் எல்லாப் பாடலும் எழுதி முடித்தவுடன் நான் கேட்டதில் 5ஆயிரம் குறைத்துக்கொண்டு 45ஆயிரம் கொடுத்தார். நான் பேசாமல் பெற்றுக்கொண்டேன். வெளியானது ‘பாட்ஷா’; வெற்றியும் பெற்றது. படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது. ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன். அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று என்னைக் கண்டு நின்றது. காரிலிருந்து இறங்கி வந்தவர் ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீ ஐயா உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்றார். சென்றேன். ஆர்.எம்.வீ என் கையில் ஓர் உறை தந்தார். ‘என்ன இது?’ என்றேன். ‘நாங்கள் குறைத்த பணம் 5000’ என்றார். ‘நன்றி’ என்று பெற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என்று கருதிக்கொண்டேன். அந்தப் பணம் 5ஆயிரத்தை டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக வழங்கினேன். “ 

ஒருவேளை வேட்டையன் படத்தின் பாடல்கள் நன்றாக இல்லை என வைரமுத்து முறைமுகமாக குறிப்பிடுகிறாரா என்கிற குழப்பத்தை ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது இந்த பதிவு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget