மேலும் அறிய

’மல்லிப்பூ பாடல் எனக்கு கொடுத்த சுதந்திரம்...’ பாடல் ஆசிரியர் தாமரை வெளியிட்ட பதிவு!

ஏ.ஆர்.ஆர் எனக்கு கொடுத்த சுதந்திரம் பெரிது.. மனம் விட்டு கருத்துக்களை எழுதிய பாடலாசிரியை தாமரை!

எல்லோரும் லூப் மோடில் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் பாடல்தான் வெந்து தணிந்தது காடு படத்தில் வரும் மல்லி பூ பாடல்.  இசைப்புயல் ஏ.அர்.ரகுமானின் இசை,  பாடலாசிரியை தாமரையின் வரிகள் இப்பாட்டிற்கு அஸ்தீவாரமாக அமைய, பாடகி மது ஸ்ரீ குரலும், நடிகர் சிம்புவின் இயல்பான க்யூட் அசைவுகளும் மல்லி பூ பாடலிற்கு பக்க பலமாக அமைந்தது.

View this post on Instagram
 
A post shared by fan_girl_STR_ (@fan_gal_str_)

இப்பாடல், திரையரங்குகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றது, மக்கள் அனைவரும் இதை கண்டு வைப் செய்ய ஆரம்பித்து விட்டனர். மல்லி பூ ஒரு விதமான வாசனை மயக்கத்தை கொடுக்கும் ஆனால், இந்த மல்லி பூ வோ மனதில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கிறது.

பாடல் வைரலாகி வரும் சமயத்தில், தாமரை அவரின் ட்விட்டர் பக்கத்தில், இப்பாடல் குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ”வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெறும் 'மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே' பாடல் பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது என அறிகிறேன். மகிழ்ச்சி .

இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. போன ஆண்டே எழுதிப் பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது. இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று !

பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை/நாட்டை/உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு ! -. கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம்,இரகுமான் எனக்குக் கொடுத்த சுதந்திரம் பெரிது ! ….

படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் 'பிரிவு' ஒரு வலுவான உணர்வல்லவா ?? . இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம்.

முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் ! விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்.” என்று தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
ABP Premium

வீடியோ

Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி
’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
Iran Protest Trump: ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
Embed widget