மேலும் அறிய

Paruthiveeran: ‘அமீர் நேர்மையை எடை போட தகுதியே கிடையாது’ - ஞானவேல் ராஜாவை சாடிய சினேகன்..

பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினையில் இயக்குநர் அமீருக்கு பாடலாசிரியர் சினேகன் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினையில் இயக்குநர் அமீருக்கு பாடலாசிரியர் சினேகன் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் படம் வெளியானது. அமீர் இயக்கிய இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சுஜாதா விஜயகுமார், கஞ்சா கருப்பு, சரவணன் என பலரும் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அப்படம் பலருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக நடிகை ப்ரியாமணிக்கு  சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 

இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு கார்த்தி நடித்த 25வது படமான ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் அவரின் அனைத்து பட இயக்குநர்களும் அழைக்கப்பட்ட நிலையில், பருத்தி வீரன் கொடுத்து கார்த்தியை அறிமுகம் செய்த அமீர் கலந்து கொள்ளாதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் அமீர் பருத்தி வீரன் பட சமயத்தில் நடந்த பிரச்சினைகள் பற்றி பேசினார். 

இதற்கு பதிலளித்த ஞானவேல்ராஜா, ‘அமீரால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அவர் ஒரு திருடன்’ என்றும் சரமாரியாக விமர்சித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட, இந்த விவகாரம் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. அமீருக்கு ஆதரவாக சமுத்திரகனி, சசிகுமார், சுதா கொங்காரா, நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் ஞானவேல்ராஜா செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இப்படியான நிலையில் பாடலாசிரியர் சினேகன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 

சினேகன் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
57 years of Thiruvarutchelvar : 39 வயதில் 80 வயது நாயன்மாராக கலங்கவைத்த சிவாஜி.. திருவருட்செல்வர் படம் வெளியான நாள்
57 years of Thiruvarutchelvar : 39 வயதில் 80 வயது நாயன்மாராக கலங்கவைத்த சிவாஜி.. திருவருட்செல்வர் படம் வெளியான நாள்
Embed widget