மேலும் அறிய

Lubber Pandhu movie: விறுவிறுப்பாக தொடங்கிய ”லப்பர் பந்து” டப்பிங் பணிகள்...! வெளியான புகைப்படங்கள்!

ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி வரும் ”லப்பர் பந்து” படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது.

”லப்பர் பந்து” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவித்துள்ள படக்குழு அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 

கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவரும், நெஞ்சுக்கு நீதி படத்துக்கு வசனம் எழுதியவருமான பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.  தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் நிலையில், ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ”லப்பர் பந்து ”படத்தின்  படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் பணிகளையும் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு பகிர்ந்துள்ள புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகர் ஹரிஷ் கல்யான் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு  சில நெகடிவ்  விமர்சனங்களையும் பெற்றது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த, அரிது அரிது, சட்டப்படி குற்றம் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. 2017 ஆம் ஆண்டு தனியார் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஹரிஷ் கல்யாண். இதில் இராண்டாம் இடத்தை பிடித்தார். 

இதனையடுத்து அவர் 2018ஆம் ஆண்டு சக பிக்பாஸ் போட்டியாளர் ரைசா வில்சனுடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்தும் அவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். 

நடிகர் தினேஷ் அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் திரை உலகில் பிரபலமானவர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகம் நல்ல வரவேற்பை பெற்றது. குக்கூ என்ற திரைப்படத்திலும் இவர் தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது, நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் தயாராகி வரும் லப்பர் பந்து திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget