Lubber Pandu: வெயிட் பண்றேன்... லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?
லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு அடைந்ததை முன்னிட்டு, தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து அறிவித்துள்ளார்.

கடந்தாண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது லப்பர் பந்து. கிராமப்புறங்களில் ஸ்டம்பர் பந்துகளில் ஆடும் கிரிக்கெட்டையும், கிரிக்கெட்டை வைத்து மாமனார் - மருமகன் இடையே நடக்கும் மோதலையும் மிக அழகாக கூறிய இந்த படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படமாக அமைந்தது.
லப்பர் பந்து ஓராண்டு நிறைவு:
தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவஸ்திகா ஆகியோர் நடித்த இந்த படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து லப்பர் பந்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
ரொம்ப நன்றி:
நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா??… pic.twitter.com/ToEDCx6csf
— Tamizharasan Pachamuthu (@tamizh018) September 20, 2025
first show முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க..
இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு…
ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும் 🙏❤️❤️
தனுஷக்கு கட், ஆக்ஷன்:
இப்டி என்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்!
ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்.. தனுஷ் சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு. நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் உற்சாகம்:
லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து தனது அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்கப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது அவரே தனது எக்ஸ் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் தற்போது இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மெயின் ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. இதில் இட்லி கடை ரிலீசுக்கு தயாராக உள்ளது. தேரே இஷ்க் மெயின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த படமும் லப்பர் பந்து போன்று குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வகையில் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். அல்லது தனுஷிற்காக ஆக்ஷன் திரைப்படமாக இதை தமிழரசன் பச்சைமுத்து எடுப்பாரா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















