கழிவறையில் செல்போன் பயன்படுத்துவது மிகவும் தவறான செயல் ஆகும். மலச்சிக்கலுக்கு இது முக்கிய காரணம் ஆகும்.
ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு வயிறு சுத்தம் மிகவும் முக்கியம் ஆகும். செரிமான பிரச்சினைக்கு காரணமாக மலச்சிக்கல் உள்ளது.
மலச்சிக்கல் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக நாம் சாப்பிடும் உணவுகளே காரணமாக அமைந்துள்ளது. இதனால், குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மாவு, ப்ரெட், பிஸ்கட் போன்ற மாவுகளால் தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகளவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பட்டாணி, கருப்புக் கொண்டைக் கடலை போன்றவற்ற மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தவிர்க்க வேண்டும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிற்றுண்டிகள், வறுத்த உணவுகள், அதிக இனிப்பு, உப்பு கொண்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் உருளைக்கிழங்கைத் தவிர்ப்பது நல்லது ஆகும். இது செரிமானத்தை மேலும் சிரமமாக்கும்.
நார்ச்சத்து குறைவாக இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பதாலும் இந்த சீஸ் மற்றும் பால் பொருட்கள் மலச்சிக்கலை மேலும் சிக்கலாக்குகிறது.
மலச்சிக்கலில் இருந்து தப்பிப்பதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் அதிகளவு சாப்பிட வேண்டும்.