Coolie Trailer : கூலி படத்தின் டிரெய்லர் வெளியானது..டிரெய்லர் ரிவியு இதோ
Coolie Trailer : சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

கூலி டிரெய்லர்
லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஸ்ருதி ஹாசன் , நாகர்ஜூனா , உபேந்திரா, செளபின் சாஹிர் , ஆமிர் கான் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். கூலி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது
கூலி டிரெய்லர் விமர்சனம்
கூலி டிரெய்லர் எப்படி

லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களின் கதைகளைப் போல கூலி படத்திலும் ஒரு பெரிய மாஃபியா இப்படத்திலும் இடம்பெறுகிறது. ஒரு மாஃபியா கும்பல் , அதை எதிர்த்து போராடும் நாயகன் என டெம்பிளேட் கதையை இந்த டிரெய்லரில் பார்க்க முடிகிறது. ரஜினியின் நண்பனாக வருகிறார் சத்யராஜ் . அவரது மகளாக ஸ்ருதி ஹாசன். வில்லனாக நாகர்ஜூனா. முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளால் படம் நிறைந்துள்ளது. மிகைப்படுத்தபட்ட ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் ரஜினியின் மாஸ் குறையாமல் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம். அனிருத் இசை படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். ஸ்ருதி ஹாசன் , உபேந்திரா , செளபின் ஆகியோர்களின் கதாபாத்திரங்கள் கதையை நகர்த்திச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என சொல்லலாம். இறுதியாக ரஜினிக்கு வரும் ஃபிளாஷ்பேக் படத்தில் ரசிகர்களை அதிகம் கவரும் காட்சியாக இருக்கும்.






















