மேலும் அறிய

கூலி தோல்வியால் அடுத்தடுத்த அடிவாங்கும் லோகேஷ்...கைநழுவிப்போன ஆமிர் கான் பட வாய்ப்பு?

ஆமிர் கானை வைத்து லோகேஷ் கான் இயக்கவிருந்த சூப்பர்ஹீரோ படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கூலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கூலி படத்தின் தோல்வியால் இந்தியில் ஆமிர் கானை வைத்து அவர் இயக்கவிருந்த சூப்பர் ஹீரோ படமும் கைவிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கைநழுவிப்போன ஆமிர் கான் படம் 

சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி என்கிற சூப்பர் ஹீரோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்தார். சூர்யாவின் கால் ஷீட் தாமதம் ஏற்பட்டதால் இந்த படத்தின் கதையை பாலிவுட் நடிகர் ஆமிர் கானுக்கு ஓக்கே செய்தார். இது குறித்து அனைவரும் பரபரப்பாக பேசி வந்த நிலையில் தற்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்ததால் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

மறுபக்கம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் இருவரையும் வைத்து புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். அண்மையில் சைமா விருது விழாவில் கமல் இந்த தகவலை உறுதிசெய்தார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.

அடுத்தடுத்து அடி வாங்கும் லோகேஷ் கனகராஜ் 

கூலி படத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கூலி படம் வெளியான பின் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் 'ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு படம் பண்ண முடியாது' என பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் ரஜினி கமலை இயக்கும் தகுதி லோகேஷ் கனகராஜூக்கு இல்லை என்றும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். கூலி படத்திற்கு லோகேஷ் ரூ 50 கோடி சம்பளமாக பெற்றார். ஆனால்  வசூல் ரீதியான தோல்விக்குப் பின் அவர் அடுத்தபடியாக இயக்கவிருக்கும் கைதி 2 படத்திற்கும் அதிகப்படியான சம்பளம் கேட்டுள்ளதாகவும் இதனால் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

ஓடிடியில் வெளியான கூலி

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான கூலி திரைப்படம் உலகளவில் 500 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்கைத் தொடர்ந்து தற்போது அமேசான் பிரை ஓடிடி தளத்தில் கூலி வெளியாகியுள்ளது. நாகர்ஜூனா , சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர் , உபேந்திரா , ஆமிர் கான் , கண்ணா ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget