ஸ்ட்ரெஸ் தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

Published by: ஜான்சி ராணி

மன அழுத்தத்தின் போது சாப்பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க சர்க்கரை மற்றும் கொழுப்பு அதி கம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முந்திரிப் பருப்பில் 14 முதல் 20 சதவீதம் வரை துத்தநாகம் இருக்கிறது. அதனை உட்கொள்வது துத்தநாக குறை பாட்டோடு சேர்த்து மன அழுத்தத்தையும் கவலையும் குறைக்க உதவும்.

மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட் கொள்ளலாம். ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தவை.

மெக்னீசியமும் மன நிலையை மேம்படுத்த உதவும். சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டை ஆகியவற்றை சாப்பிடலாம்.

அவகாடோவிலும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் சி மற்றும் பி6 ஆகியவை உள்ளடக்கி இருக்கின்றன. அவை மன அழுத்தத்தையும்,ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவிடும்.

பாலில் இருக்கும் டிரிப்டோபன் மெலபோனின் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மன அழுத்தத்தைக் குறைந்து நல்ல உறக்கத்திற்கு உதவும்.

நார்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள் உட் கொள்வது மிக அவசியம். தண்ணீரை விட மிகப்பெரிய மருந்து எது வும் இல்லை. நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்வதும் அவசியம்