‛புஜ்ஜி கண்ணா’... விஜய் தேவரகொண்டாவுக்கு செல்லப் பெயர் வைத்த அனன்யா பாண்டே!
Ligar : தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் "லிகர்" படத்தின் விளம்பரத்திற்காக பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விழாவில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் படத்தை பற்றி ப்ரோமோஷன் செய்துள்ளனர்.
![‛புஜ்ஜி கண்ணா’... விஜய் தேவரகொண்டாவுக்கு செல்லப் பெயர் வைத்த அனன்யா பாண்டே! Ligar heroine calls Vijay Devarkonda as bujji khanna in Ligar promotion ‛புஜ்ஜி கண்ணா’... விஜய் தேவரகொண்டாவுக்கு செல்லப் பெயர் வைத்த அனன்யா பாண்டே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/75c32212b0afb4deaf689690610d9d101660634940834224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Ligar promotion : செல்லம்...புஜ்ஜி கண்ணா...யாரை இப்படி செல்லமா கொஞ்சறாங்க "லிகர்" ஹீரோயின்
இளம் பெண்களின் ஹார்ட்த்ரோப் ஆக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் அனன்யா பாண்டே உடன் இணைந்தது நடிக்கும் திரைப்படம் "லிகர்". இந்தியா முழுவதும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள் இப்படக்குழுவினர். இந்த ஜோடி சமீபத்தில் வாரங்கலில் தங்களது படத்தின் விளம்பரத்திற்காக சென்ற போது ஒரு செல்ல பெயரை வைத்து விஜய் தேவரகொண்டாவை அழைத்து ஹீரோவை வெட்க பட வைத்துள்ளார் அனன்யா பாண்டே.
கன்னங்கள் சிவக்க செல்லமாக கூப்பிட அனன்யா:
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் "லிகர்" படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விழாவில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் படத்தை பற்றி ப்ரோமோஷன் செய்துள்ளனர். அனன்யா இப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகம் ஆவதால் தெலுங்கு ரசிகர்களுடன் சற்று உரையாட விருப்பியுள்ளார். அந்த மாபெரும் கூட்டத்தில் அனன்யா பாண்டே தனது படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டாவை முகம் சிவக்க "புஜ்ஜி கண்ணா" என்று செல்லமாக அழைத்துள்ளார். மேலும் "லிகர்" படத்தின் ஒரு பகுதியாக தான் இருபதில் மிகவும் மகிழ்ச்சி என உற்சாகமா உரையாடினார் அனன்யா.
View this post on Instagram
அனன்யா தெலுங்கு உரையாடல் வீடியோ இதோ :
அனன்யா தெலுங்கு ரசிகர்களுடன் நிகழ்த்திய உரையாடல்க வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "நன் உங்கள் மீது பொழியும் அன்பையும் நீங்கள் என் மீது காட்டும் அன்பையும் என்னால் முடிந்த வரையில் திருப்பி தர முயற்சித்துள்ளேன். நிச்சம் நீங்கள் அதை உணர்வீர்கள் என எதிர்பார்க்கிறேன் " என்றுள்ளார் அனன்யா பாண்டே.
View this post on Instagram
பேன் இந்திய படம் :
விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே நடிக்கும் "லிகர்" படத்தினை இயக்கியவர் பூரி ஜெகன்னாத். இது ஒரு பேன் இந்தியா படம் என்பதால் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ஆகஸ்ட் 25, 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)