LGM Trailer: ஆரம்பமே அமர்க்களம் .. வெளியானது தோனி தயாரிக்கும் Let's Get Married பட ட்ரெய்லர்.. (Watch Video)
Lets Get Married Trailer: கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள Let's Get Married படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Lets Get Married Trailer: கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள Let's Get Married படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஹரிஷ் கல்யாண்,இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “எல்.ஜி.எம்” (Lets Get Married). இந்த படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் இசையமைத்துள்ளார் ரமேஷ் தமிழ்மணி.
காதலை மையமாக வைத்த காமெடியான காட்சிகளை கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோதிரம் ஒன்றிற்குள் நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் படத்தின் டீசர் வெளியானது. தொடர்ந்து ஜூன் 15 ஆம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படியான நிலையில் “எல்.ஜி.எம்” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய தோனியின் மனைவி சாக்ஷி, “ தமிழில் படம் எடுக்க தோனி தான் காரணம் என்றும், நான் படம் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.இந்த படத்தின் மூலம் எனக்கு இப்போது சென்னையில் ஒரு குடும்பம் கிடைத்துள்ளது” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய தோனி, “பட வேலைகளில் தலையிடாததற்கு காரணம் ஐபிஎல் தொடரில் விளையாடியது தான். விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எல்.ஜி.எம் படத்தை பார்க்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ட்ரெய்லர் வெளியானது. இதில் உள்ள காட்சிகளை பார்க்கும் போது, “ அப்பாவை இழந்து அம்மா நதியாவுடன் வசிக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும், இவானுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இந்த திருமணத்திற்கு நதியா ஓகே சொல்லும் நிலையில், மாமியாருடன் ஒரே வீட்டில் வசிக்கும் நிலைக்கு இவானா மறுக்கிறார். அவரைப் பற்றி புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு பயணம் போக வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். அந்த பயணத்தில் என்ன நடக்கிறது என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. ட்ரெய்லர் தொடக்கம் முதல் இறுதி வரை என்டெர்டெயின்மென்ட் கேரண்டி என்பது போல உள்ளது.