மேலும் அறிய

Leo Shooting Spot Pic: தீ தளபதியாய் விஜய்.. காஷ்மீரில் பரபரபக்கும் லியோ ஷூட்டிங்..! லோகி தந்த லேட்டஸ்ட் அப்டேட்..!

Leo Shooting Spot Pic: காஷ்மீரில் நடந்து வரும் லியோ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழுவினருடனான புகைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

Leo Shooting Spot Pic: காஷ்மீரில் நடந்து வரும் லியோ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய், இயக்குநர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் உள்ளனர். 

 

இந்த புகைப்படம் தற்போது விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

மாஸ்டர் கூட்டணி 

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - தயாரிப்பாளர் லலித் குமார் மீண்டும் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வெளியானது. அன்றைய தினம் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

நட்சத்திரப் பட்டாளம் 

இதையடுத்து தளபதி 67 படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜூன் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. 

அடுத்தடுத்து அப்டேட்டுகள் 

இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் படக்குழுவும் காஷ்மீர் பயண வீடியோவை அதிகாரப்பூர்வமாக படக்குழு ஏற்கனவே வெளியிட்டது. மேலும் தளபதி 67 படத்தின் டைட்டில் ’லியோ’ என்றும் படக்குழு அறிவித்தது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முதல் இன்று (பிப்ரவரி 10) வரை அடுத்தடுத்து அப்டேட்டுகளை வழங்கி ”லியோ”படக்குழு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், படப்ப்பிடிப்புக்கு மத்தியில் காஷ்மீர் குளிரில் தீ பற்ற வைத்து அதன் அருகில் நின்று எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அதில், #Kashmir 🧊#LEO 🔥 என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்து படக்குழுவினருக்கு மத்தியிலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு அருகிலும் நின்று கொண்டு உள்ளார். 

பக்கா ஸ்கெட்ச்

ஏற்கனவே விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியான நிலையில், லியோ படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை, மறுநாள் 25 ஆம் தேதி விஜயதசமி என விடுமுறை நாட்கள் வருகிறது. ஆக அக்டோபர் 19 தொடங்கி 24 ஆம் தேதி 6 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் அந்த நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் வசூலை அள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. கண்டிப்பாக இந்த படமும் அதிகப்படியான வசூலை பெற்று சாதனைப் படைக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget