மேலும் அறிய

T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீன் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்தினார். அப்போது தான் பேச வேண்டியதை மலையாளத்தில் எழுதி அதை தமிழில் தவறில்லாமல் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக உரையாற்றிய விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீனின் பேச்சு பலரையும் கவர்ந்தது. அதிலும் அவர் தமிழை மலையாளத்தில் எழுதி வைத்து பேசியது பாராட்டைப் பெற்றுள்ளது. 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

தவெக அரசு  ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரு பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு உறுப்பினர்களும் எழுந்து பட்ஜெட் மீதான விமர்சனம், தமிழக அரசு மீதான கருத்து, தங்களுடைய கோரிக்கைகள் போன்றவற்றை தெரிவித்து வருகின்றனர். 

கவனம் ஈர்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீன்

அப்போது கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீன் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்தினார். தான் சார்ந்த தொகுதியின் பல பிரச்னைகளை எடுத்துரைத்தார். அவர் பேசி முடிக்கையில் மொழி வாரி மாநிலங்களாக தமிழ்நாடு - கேரளா பிரிக்கப்பட்டபோது விளவங்கோடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. வனத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருந்ததே இதற்கு காரணமாகும். 

ஆனால் இப்போது அந்த மக்களுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு வந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கேயும் ஊழல் இல்லை. லஞ்சம் இல்லை. ஒரு நல்ல ஆட்சி வந்ததால் நியாயம் இருந்தால், நாம் கேட்டால் நடக்கும் என்ற நம்பிக்கை அந்த ஏழை, எளிய மக்களுக்கு வந்துள்ளது. இதனை பெண்கள், தாய்மார்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் என சொல்லவும் தவெக எம்.எல்.ஏ.க்கள் உற்சாகமாகி மேஜையை தட்டினர். மேலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானது. 

இதில் சுவாரஸ்மாயமான விஷயம் என்னவென்றால் பிரவீனுக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது. அவர் சட்டசபையில் தமிழை தங்க்லீஷ் போல மலையாளத்தில் எழுதி வார்த்தை பிறழாமல் சரியாக உச்சரித்து உரையாற்றினார். இது மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. பலரும் யார் இந்த பிரவீன் என இணையத்தில் தேடி வருகின்றனர். 

யார் இந்த பிரவீன்?

டி.டி. பிரவீன் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கட்சியின் உள்ளூர் பிரமுகர்களால் கடும் பிரச்னை எழுந்தது. அவர் தென் கேரள சி.எஸ்.ஐ பேராலயத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. பிரவீன் தவெக வேட்பாளரை வீழ்த்தி 20,970 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த சி.எஸ்.ஐ பேராலய நிர்வாகியான பிரவீனுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் கேரளா, விளவங்கோடு தொகுதி மக்களின் வாக்குகளை அள்ளலாம் என காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோரத் தொகுதியான விளவங்கோடு தொகுதியைச் சேர்ந்த பிரவீன் M.Tech., பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

தலைப்பு செய்திகள்

T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Embed widget