மேலும் அறிய

Naa Ready Song Promo: ’எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா’ .. பட்டையை கிளப்பும் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ..!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நா ரெடி’ இடம் பெற்றுள்ள பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நா ரெடி’ இடம் பெற்றுள்ள பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பிறகு 2வது முறையாக இணைந்துள்ளது. விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. பேன் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோ படமானது அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.  நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளது. 

அதன்படி அர்ஜூன், சஞ்சய் தத், இயக்குநர் மிஷ்கின், நடிகை ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியன், அபிராமி, மடோனா செபாஸ்டியன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் லியோ படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது. 

இதனிடையே ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 49வது பிறந்தநாள் வரும் நிலையில், லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் விஜய்யுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இடம் பெற்றுள்ளார்கள் . இந்த பாடலின் செலவு விஜய்யால்  ரூ.1 கோடி குறைந்துள்ளதாகவும் தயாரிப்பாளர் லலித் குமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த பாடலை நடிகர் விஜய் தான் பாடியுள்ளார். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. விஷ்ணு எடவன் எழுதிய இந்த பாடல் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பிடும் வகையில் உள்ளது.மேலும் விஜய் அறிமுகமான காலக்கட்டத்தில் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பாடலின் நடுவில் ‘இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ என்ற வாசகம் இடம் பெற்றது. இந்நிலையில் அதனை மீண்டும் குறிப்பிட்டு லியோ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏபிபி நாடு செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
"காலம் மாறும்! பதில் சொல்லத் தயாரா இருங்க" அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை கண்டனம்
Donald Trumps Inauguration: டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா..! எங்கு?எப்போது? எப்படி நேரலையில் காணலாம்? சிறப்பு விருந்தினர்கள்
Donald Trumps Inauguration: டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா..! எங்கு?எப்போது? எப்படி நேரலையில் காணலாம்? சிறப்பு விருந்தினர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
"காலம் மாறும்! பதில் சொல்லத் தயாரா இருங்க" அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை கண்டனம்
Donald Trumps Inauguration: டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா..! எங்கு?எப்போது? எப்படி நேரலையில் காணலாம்? சிறப்பு விருந்தினர்கள்
Donald Trumps Inauguration: டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா..! எங்கு?எப்போது? எப்படி நேரலையில் காணலாம்? சிறப்பு விருந்தினர்கள்
TVK Vijay: பிரான்ஸில் TVK கட்சிக்கு ப்ரமோஷன்! தவெக கொடியுடன் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!
TVK Vijay: பிரான்ஸில் TVK கட்சிக்கு ப்ரமோஷன்! தவெக கொடியுடன் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!
வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி...கெளதம் மேனன் தான் டைரக்டரா !
வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி...கெளதம் மேனன் தான் டைரக்டரா !
Novak Djokovic: 2018-லே ஓய்வு பெற முடிவு செய்த ஜோகோவிச்! மீ்ண்டும் விளையாடியது எப்படி?
Novak Djokovic: 2018-லே ஓய்வு பெற முடிவு செய்த ஜோகோவிச்! மீ்ண்டும் விளையாடியது எப்படி?
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
Embed widget