Lokesh Kanagaraj: ‘லியோ’ வெற்றி பெற ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்
"நான் ரெடிதான் வரவா," "அண்ணன் ரெடி, கொண்டாட வா"...! 'நாளை மறுநாள் 'லியோ' ரிலீஸ்.."
'லியோ' பட வெற்றி பெற படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வரும் 19ந் தேதி வெளியாக உள்ள 'லியோ' திரைப்படம் வெற்றி பெற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராடி பின்னர் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை சாமி தரிசனம் செய்தார் .
அப்போது திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்தனர்.
சாமி தரிசனத்தை முடித்துக் கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருக்கோயில் வாசலில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி சென்றார்.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்கள் வெளியாகுவதற்கு முன் ராமேஸ்வரம் கோவில் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லியோ வெற்றி பெற ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற லோகேஷ்https://t.co/wupaoCzH82 | #Leo #LokeshKanakaraj #LeoFDFS #Leo #ThalapathyVijay #TamilNadu pic.twitter.com/29eY9K4AvM
— ABP Nadu (@abpnadu) October 17, 2023