Leo : வாடியம்மா ஜக்கம்மா.. மீண்டும் விஜய்யுடன் ஒரு சிங்கிளுக்காக களமிறங்கும் கிரண்
திருமலை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஒரு செம்மையான சிங்கிளுக்கு போடவருகிறார் நடிகை விஜய்

லியோ படத்தில் நான் ரெடிதான் பாடலில் நடிகை கிரண் நடித்துள்ளதாக பரபரப்பான தகவலைப் பகிர்ந்துள்ளார் நடிகை கிரண்.
லியோ
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம்வெளியாக உள்ளது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22-ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக்குழு வெளியிட்டது.
இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு சிவன் எழுதியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலில் இந்நிலையில் ‘நான் ரெடி’ பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) வியூஸைக் கடந்தது.
நடிகை கிரண்
ஜெமினி படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், தென்னவன், நியூ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் நடிகர் விஜய் நடித்த திருமலை, சரத்குமார் நடித்த அரசு, அர்ஜூன் நடித்த சின்னா, விஷால் நடித்த திமிரு உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். சில காலம் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த கிரண், மீண்டும் விஷால் நடித்த ‘ஆம்பள’ படம் மூலம் துணை கேரக்டரில் நடிக்க தொடங்கினார்.
இதன்பின்னர், சகுனி, முத்தின கத்திரிக்கா,இளமை ஊஞ்சல் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கிரண், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தெரிவித்துள்ளார்.
வாடியம்மா ஜக்கம்மா
View this post on Instagram
இது எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது நான் ரெடிதான் பாடல் குறித்த மற்றொரு தகவல் என்னவென்றால், கிரண் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்தத் தகவலை தெரிவித்தார் நடிகை கிரண். முன்னதாக விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கமா என்கிற பாடலுக்கு விஜய் கிரண் இருவரும் சேர்ந்து ஆடியது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

