Legend Saravanan: புது கெட் அப்பில் ஆயுத பூஜை கொண்டாடிய "லெஜண்ட்" சரவணன்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
தொழிலதிபர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக கொண்ட அருள் சரவணன் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுதபூஜை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தொழிலதிபர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக கொண்ட அருள் சரவணன் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுதபூஜை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகிய பண்டிகைகள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் தொழில் செய்யும் கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். அந்த வகையில் சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன உரிமையாளராக ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடினார். பின்னர் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய அருள் சரவணன், “எனக்கு 2 விஷயங்கள் மிகவும் பிடிக்கும். ஒன்று ஆடி ஓடி உழைப்பது, மற்றொன்று அன்பு செலுத்துவது. காரணம் நாம் எதை விதைக்கிறமோ, அதுவே நமக்கு பல மடங்காக கிடைக்கும். ஒரு நல்ல சமுதாயம் உருவாக அன்பை வாரி வழங்க வேண்டும். அப்போது தான் மனிதநேயம் பெருகும்” என தெரிவித்தார். தொடர்ந்து தனது லம்போர்கினி காரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்த அவர், பின்னர் ஆட்டோ தொழிலாளர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டி அசத்தினார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
லெஜண்ட் சினிமா பயணம்
பொதுமக்களிடையே பிரபலமான நிறுவனமாக திகழும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன், தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலம் மக்களிடையே நன்றாக பரீட்சையமானார். இந்த விளம்பரத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து அசராமல் அடுத்தடுத்த தளங்களுக்குள் அடியெடுத்து வைத்த அவர் கடந்த ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அதிரடி எண்ட்ரீ கொடுத்தார்.
ஆட்டோ தொழிலாளர்களுடன் விஜயதசமி கொண்டாடிய மகிழ்ச்சியான தருணம்…#Thelegend #LegendSaravanan pic.twitter.com/mDRvXMstlr
— Legend Saravanan (@yoursthelegend) October 24, 2023
இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்கி வந்த இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இயக்கியிருந்தனர். இந்த படம் கடும் விமர்சனத்தை சந்தித்தாலும், பலர் அருள் சரவணனின் முயற்சியையும் பாராட்டினர். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் சளைக்காத அவர், அடுத்தப்படத்திற்கான கதைகளை கேட்டு வருவதாக கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தெரிவித்திருந்தார். அப்போது குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய அருள் சரவணன் அவர்களுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ‘ஹூக்கும்’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Jason Sanjay: ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அவதாரம்.. காரணமாக இருந்த அந்த நபர் யார் .. வெளியான தகவல் இதோ..!