Lokesh kanagaraj: ரகசிய திருமணமா? ஷூட்டிங் வேலையா? ரிஜிஸ்டர் ஆபிஸில் பரபர லோகேஷ் கனகராஜ்! வீடியோவால் பரபரப்பு..!
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி படம் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர், மாஸ்டர் படம் மூலமாக விஜயுடன் கைகோர்த்து முன்னணி இயக்குனராக உருவானார்.
இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னை மதுரவாயலில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இளம் பெண் ஒருவருடன் சென்றுள்ளார். அங்கு அவர்களுடன் லோகேஷ் கனகராஜூன் நண்பர்களும் சென்றுள்ளனர். அவர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்து இளம்பெண்ணுடன் வெளியே வருவதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
மேலும், லோகேஷ் கனகராஜ் நீண்டநாட்கள் காதலித்து வந்த தனது காதலியை மதுரவாயல் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது. ஆனால், உறுதியாக லோகேஷ் கனகராஜ் திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவதற்காக சார்பதிவாளர் அலுவலகம் வந்தாரா? அல்லது தனது சொத்தை ஏதேனும் பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகம் வந்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜை கண்ட ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
#LokeshKanagaraj spotted at Maduravoyal Register office.#VikramFromJune3 #Vikram #LokeshKanagaraj #VijaySethupathi #FahadhFaasil pic.twitter.com/nMUlNem4L9
— Mari (@mari251211) May 4, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்