Latha Rajinikanth : கால்கடுக்க நின்ற கூட்டம்; பிறந்தநாளில் எங்கே சென்றார் ரஜினி..? - சுவாரசிய தகவல்!
ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்க, போயஸ் கார்டன் வெளியில் காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான அடையாளமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளான இன்று, அவருக்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அவரின் பிறந்தநாளான இன்று அவரின் போயஸ் கார்டன் இல்லத்தின் வெளியில் ரசிகர்கள் கூட்டம் இன்று காலை முதல் அலைமோதுகிறது. மழை பொழிவதை கூட பொருட்படுத்தாமல் சூப்பர் ஸ்டாரை ஒரு முறையாவது நேரில் பார்த்து, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திட வேண்டும் என மிகவும் ஆவலாக காலை முதல் கால் கடுக்க காத்திருக்கிறார்கள் ரஜினிகாந்த் தீவிர ரசிகர்கள். அது மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
லதா ரஜினிகாந்த் கூறிய தகவல் :
இந்த தகவல் அறிந்த ரஜினிகாந்தின் மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து " ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவர் இங்கு இல்லாத காரணத்தால் உங்களை வந்து சந்திக்க முடியவில்லை. அதனால் யாரும் மழையில் காத்திருக்க வேண்டாம். அவரின் சார்பாக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
ஏமாற்றத்தில் ரசிகர்கள் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்க மிகவும் ஆர்வமாக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
Birthday wishes 🥳 to the man whose life journey is an inspiration for many 🤩 the man of style 😎 the one & only Superstar 🌟 Dear Thalaivar @rajinikanth ✨
— Lyca Productions (@LycaProductions) December 12, 2022
Wishing you another year filled with health & happiness 🙏🏻😇❤️✨#HBDSuperstarRajinikanth #Superstar #Rajinikanth pic.twitter.com/bRUy9WaXpQ
பிறந்த நாள் அன்று அவரை காணமுடியாமல் தவித்த ரசிகர்கள் அவர் எங்கு சென்று விட்டார் என குழம்பிப்போய் உள்ளனர்.