மேலும் அறிய

Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்” - ரஜினிகாந்த் உணர்ச்சிகரப் பதிவு!

Lal Salaam Rajinikanth:மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில் படத்தில் ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. தன் மகள் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார்.

மொய்தீன் பாய் கதாபாத்திரம்

மேலும் விஷ்ணு  விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று காலை வெளி நாடுகள், அண்டை மாநிலங்களில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.

மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், படத்தில் ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சிறப்பாக ரஜினி பாத்திரத்துக்கு பொருந்தியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் உணர்ச்சிகரம்

இதனிடையே, தன்னை முதன்முறையாக இயக்கியுள்ள தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் உணர்ச்சிகரமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் தன்னை ஐஸ்வர்யா வீல் சேரில் அமர்த்தி தள்ளிச் செல்லும் புகைப்படம் ஒன்றிணையும் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினிகாந்த் இதே போல் ஐஸ்வர்யாவை தன் இரண்டாவது தாய் எனக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார். தான் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்தபோது தன்னை ஐஸ்வர்யா தனியாக வந்து பார்த்துக் கொண்டதாக ரஜினி எமோஷனலாகப் பேசி இருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்தின் இந்த ட்வீட் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது.

தமிழ்நாட்டில் ‘லால் சலாம்' திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று முதலே ரஜினிகாந்த் ரசிகர்களால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இப்படம் லைகா நிறுவனம் தயாரிப்பில் 80 - 90 கோடிகளில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதல் நாளிலேயே நல்ல வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Lal Salaam: “மொய்தீன் பாய்” மட்டுமா..? ரஜினி இதுவரை நடித்துள்ள இஸ்லாமிய கேரக்டர்கள் என்னென்ன தெரியுமா?

Lal Salaam Release LIVE : மொய்தீன் பாய் தரிசனம்.. முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடும் ரசிகர்கள்.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Embed widget