மேலும் அறிய

Vijay Devarakonda: 'தமிழில் சிறந்த இயக்குநர்கள் யார் ?’ - பட்டியலிட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா

தமிழில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறந்த இயக்குநர்கள். இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும்.

இயக்குநர் சிவா நிர்வான இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா, நடிகை சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள குஷி திரைப்படம், செப்டம்பர் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்காக ப்ரமோசன் பணிகளில் திரைப்பட குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக படத்தின் நடிகர் விஜய் தேவரகொண்டா கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேட்டியளித்த அவர், செப்டம்பர் 1 ம் தேதி குஷி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது எனவும், இதில் நானும் சமந்தாவும் நடித்துள்ளதாகவும் கூறினார்.

காதல் கதை சார்ந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகி உள்ளது என தெரிவித்த அவர், இதனை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று காணுங்கள் என்றார். தமிழ், தெலுங்கு போன்ற படங்களை பொருத்தவரை பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். தமிழில் விஜய் நடித்த குஷி படமும், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த குஷி படமும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்ராக அமைந்தது. நான் நடித்துள்ள குஷி திரைப்படம் குடும்பங்களுடன் வந்து பார்க்க கூடிய படமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். தமிழக மக்கள் கண்டிப்பாக குஷி படத்தில் வரக்கூடிய பாடல்களை ரசிப்பார்கள் என்றார். ஸ்கிரிப்ட் இருந்தால் நிச்சயம் அடுத்த முறை சமந்தாவுடன் நடிக்க தயாராக உள்ளேன் எனவும் அவர் கூறினார்.

Vijay Devarakonda: 'தமிழில் சிறந்த இயக்குநர்கள் யார் ?’ - பட்டியலிட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா

நீ தானே என் பொன்வந்தம் போன்ற படங்களை பார்த்துள்ளேன் எனவும், சமந்தாவின் ரசிகன் நான் எனவும் அவர் தெரிவித்தார். பாகுபலி, புஷ்பா, கே.ஜி.எப் போன்ற படங்கள் மிகப்பெரிய படங்கள். மாவீரன் படத்தை நேற்றைய தினம் பார்த்தேன். படம் மிகவும் பிடித்திருந்தது. சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். தமிழில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் சிறந்த இயக்குநர்கள். இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். காலா, கபாலி போன்ற படங்களின் கேமரா மேன் முரளி இந்த படத்திலும் எங்களுடன் இணைந்துள்ளார்.

ஜெயிலர் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் படத்தின் ரிவ்யூ நன்றாக உள்ளது எனவும், ஜெயிலர் படம் அதிகமான வசூல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார். தற்போது வரக்கூடிய படங்கள் வெளிநாடுகளில் பயணிக்காமல் இங்கேயே காஷ்மீரில் படமாக்குவது - படக்காட்சிகளுக்கு ஏதுவாக அமைகிறது எனவும், காஷ்மீர் மக்கள் நன்கு பழகக் கூடியவர்கள். படக்காட்சிகளை எடுப்பதற்கு அனைத்து பாதுகாப்பும் அனைத்து வசதிகளும் காஷ்மீரில் உள்ளது என தெரிவித்தார். அனைத்து மொழி படங்களிலும் படம் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது. குஷி படத்தின்  இசையமைப்பாளர் கேரளாவை சேர்ந்தவர் மற்ற கலைஞர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றார். முக்கியமாக சினிமா துறையில்  திறமை என்பது அவசியமானது. திறமையின் மூலம்தான் சினிமா துறை பயணிக்கிறது எனவும், அந்த பார்வையில் தான் நான் இத்துறையை பார்க்கின்றேன் எனவும் கூறினார்.

மேலும் படிக்க : Gedee Car Museum: 'பெரியார் பயன்படுத்திய கேரவனில் இவ்வளவு வசதிகளா?’ - ஆச்சரியப்படுத்தும் ஜி.டி. கார் அருங்காட்சியகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget