Park Soo Ryun Death: படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து இறந்த இளம் நடிகை... சோகத்தில் ரசிகர்கள்..!
ஸ்னோ டிராப் படத்தில் நடித்த கொரிய நடிகை பார்க் சூர்யூன் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்னோ டிராப் படத்தில் நடித்த கொரிய நடிகை பார்க் சூர்யூன் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் 1994 ஆம் ஆண்டு பிறந்த பார்க் சூர்யூன், 2018 ஆம் ஆண்டு Il Tenore என்ற படத்தின் ரசிகர்களிடத்தில் அறிமுகமானார். மேலும் ஃபைண்டிங் மிஸ்டர் டெஸ்டினி, தி டேஸ் வி லவ்ட் மற்றும் சித்தார்த்தா உள்ளிட்ட பல படங்களில் தோன்றியுள்ளார். அதேபோல் பார்க் சூர்யூன் பிளாக்பிங்கின் ஜிசூ மற்றும் ஜங் ஹே இன் ஸ்னோ டிராப் ஆகியவற்றிலும் துணை வேடத்தில் தோன்றினார்.
அவருக்கு திருப்புமுனையாக ஜேடிபிசி வரலாற்று நாடகமான ஸ்னோ ட்ராப் படம் அமைந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும் ‘இந்த படத்தில் எனது கேரக்டர் மிகச் சிறியதாக இருந்தாலும்இறுதி வரை எங்களுடன் தங்கி ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவரையும் கவனித்துக்கொண்டதற்கு நன்றி.விரைவில் வேறொரு திட்டத்தில் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்’என தெரிவித்திருந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம், பார்க் சூர்யூன் வேலை முடிந்து வீடு திரும்பும் போது படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் பார்க் சூர்யூன் மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து பார்க் சூர்யூனை கௌரவிக்கும் வகையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
பார்க் சூரியூன் மரணமடைந்த தகவல் அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். பார்க் சூர்யூன் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.