தேவர் மகன் கமலுக்கு மகள்.. கொம்பனில் கமல்.. - இது முத்தையா யுனிவர்ஸ்... அவரே சொன்ன சுவாரஸ்யம்!
தேவர் மகன் படத்தின் நீட்சியாக அந்த கதாபாத்திரம் இருந்திருக்கும் என்கிறார்
விருமன் :
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன்,புலிக்குத்தி பாண்டி வரிசையில் தற்போது விருமன் படத்தை கையில் எடுத்திருக்கிறார். கூட்டுக்குடும்பமாக வாழும் நாயகனின் குடும்ப உறுப்பினரில் ஒருவர் தவறு செய்கிறார். உறவு என்றும் பாராமல் அதனை நாயகன் எப்படி தட்டிக்கேட்கிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் . படத்தில் கார்த்தி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். விருமனை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
View this post on Instagram
கொம்பனில் கமல் :
விருமன் படத்தின் இயக்குநர் முத்தையா தற்போது படத்தின் புரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார். அப்படி சமீபத்தில் அவர் கொடுத்த நேர்காணலில் சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான கொம்பன் திரைப்படத்தில் ராஜ் கிரண் நடித்த , முத்தையா கதாபாத்திரத்தை முதலில் கமல்ஹாசனை மனதில் வைத்துதான் எழுதினாராம் முத்தையா. ஆனால் அந்த சமயத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்ததால் அவரை அனுக முடியவில்லையாம். ஒருவேளை கமல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் , தேவர் மகன் படத்தின் நீட்சியாக அந்த கதாபாத்திரம் இருந்திருக்கும் என்கிறார். தேவர் மகன் படத்தில் சக்திவேலாக நடித்த கமல்ஹாசனுக்கு ஒரு மகள் பிறந்து அந்த மகளை கார்த்திக்கு திருமணம் செய்து வைக்கிறார்.அதன் பிறகு வழக்கமான கொம்பன் படத்தின் கதைதான் இருந்திருக்கும் என்றாலும் கமல் சாருக்கென சில மாறுதல்களை செய்திருப்பேன் என்கிறார் முத்தையா. விரைவில் ஆர்யாவுடன் அடுத்த படத்தை இயக்கவுள்ள முத்தையா, கமல், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடனும் அடுத்தடுத்த படங்களை இயக்கும் எண்ணம் உள்ளதாகவும் கூறுகிறார்.
View this post on Instagram
விருமன் ரிலீஸ் எப்போ?
முன்னதாக 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. தற்போது, இப்படம் முன்னதாகவே ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. கோப்ரா படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில், விருமன் படக்குழுவினர் படத்தை முன்னதாகவே வெளியிட திட்டமிட்டு இருக்கலாம் என ட்விட்டர் பக்கத்தில் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர். விருமன் படம் முன்னதாகவே ரிலீஸ் ஆவதை பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.