மேலும் அறிய

"விக்ரம் முதல் விஜய் சேதுபதி வரை" ரிலீசே ஆகாத பிரபலங்களின் படங்கள் இத்தனையா?

மதகஜராஜா படம் 12 வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், நீண்ட வருடங்களாக கிடப்பில் உள்ள பிரபலங்களின் படங்களை காணலாம்.

பொங்கல் வெளியீடாக தமிழில் வெளியாகும் படங்களில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது மதகஜராஜா. விஷால் நடித்துள்ள இந்த படம் 12 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வருகிறது. இதன் காரணமாகவே இந்த படம் தனித்துவமாக ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. 

இதுபோல, தமிழில் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பிலே உள்ள திரைப்படங்களை கீழே காணலாம். 

துருவ நட்சத்திரம்:

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் விக்ரம். பன்முக கலைஞரான இவரது நடிப்பில் பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் துருவ நட்சத்திரம். ஆக்ஷன் திரில்லர் படமான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு படம் ரிலீஸ் ஆகாமலே ஒத்திவைக்கப்பட்டது. நீண்ட வருடமாக ரிலீஸ் ஆகாத துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

அலாதீனின் அற்புத கேமரா:

மூடர்கூடம் படம் மூலமாக கோலிவுட்டில் கவனம் பெற்றவர் இயக்குனர் நவீன். இவர் நடித்து, இயக்கிய படம் அலாதீனின் அற்புத கேமரா. இந்த படம் 2019ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 ஆண்டுகளாக இந்த படம் ரிலீஸ் ஆகாமலே உள்ளது. 

கர்ஜனை:

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை த்ரிஷா. நாயகியாக மட்டுமில்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கர்ஜனை. இந்த படம் இன்னும் திரையரங்கில் ரிலீசாகாமல் உள்ளது. 

நரகாசூரன்:

துருவங்கள் பதினாறு படம் மூலமாக புகழ்பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நரகாசூரன். அரவிந்த் சாமி, ஸ்ரேயா நடித்துள்ள இந்த படம் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 8 ஆண்டுகளாகியும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. 

பார்ட்டி:

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு. சென்னை 28 படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் பார்ட்டி. ஜெய், சிவா, ஷாய், ஜெயராம், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் 5 ஆண்டுகளாகியும் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. 

இடம் பொருள் ஏவல்:

சீனு ராமசாமி இயக்கத்தில் பிரபல நடிகர்களான விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2018ம் ஆண்டே இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை படம் ரிலீஸ் ஆகவில்லை. 

சதுரங்க வேட்டை 2:

அரவிந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் சதுரங்க வேட்டை 2. நிர்மல் குமார் இயக்கியுள்ள இந்த படம் கடந்த 2017ம் ஆண்டே படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால், தற்போது வரை இந்த படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

சர்வர் சுந்தரம்:

காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் ஆனந்த் பால்கி இயக்கிய படம் சர்வர் சுந்தரம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. முழுக்க காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. 

மன்னவன் வந்தானடி:

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் மன்னவன் வந்தானடி. 2017ம் ஆண்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகிய நிலையில் அதன்பின்பு படம் பாதியிலே கைவிடப்பட்டது. 

வா டீல்:

அருண் விஜய், கார்த்திகா நாயர், வம்சி கிருஷ்ணா நடிப்பில் உருவாகிய ஆக்ஷன் படம் வா டீல். ரத்னசிவா இயக்கத்தில் உருவாகிய இந்த படம் கடைசி வரை ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை உள்ளது. 

பாக்சர்:

அருண் விஜய் நடிப்பில் விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகிய படம் பாக்சர். ரித்திகா சிங் நாயகியாக நடித்திருப்பார். இந்த படம் தற்போது வரை ரிலீஸ் ஆகாமலே உள்ளது. பிரபலங்களின் இந்த படங்கள் மட்டுமின்றி சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் இதுவரை ரிலீஸ் ஆகாமலே உள்ளது.



மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவாகரத்து ஆகி 10 ஆண்டுக்கு பின் மீண்டும் இணைந்த பிரபல இயக்குநர், நடிகை - மீண்டும் திருமணம் செய்துகொள்வார்களா?
விவாகரத்து ஆகி 10 ஆண்டுக்கு பின் மீண்டும் இணைந்த பிரபல இயக்குநர், நடிகை - மீண்டும் திருமணம் செய்துகொள்வார்களா?
சக நடிகைக்கு உள்ளாடையை பரிசளித்த மலையாள நடிகர்...கூடிய விரைவில் விவாகரத்து?
சக நடிகைக்கு உள்ளாடையை பரிசளித்த மலையாள நடிகர்...கூடிய விரைவில் விவாகரத்து?
கானா பாடகர் என்றால் இளக்காரமா...யூத் பட மோனிஷா பாடல் சர்ச்சை..கென்னை வெளுக்கும் ரசிகர்கள்
கானா பாடகர் என்றால் இளக்காரமா...யூத் பட மோனிஷா பாடல் சர்ச்சை..கென்னை வெளுக்கும் ரசிகர்கள்
Ram Charan Injured: பெடி பட ஷூட்டிங்கில் விபத்து.. ராம்சரணுக்கு என்னாச்சு.. பதறிப்போன ரசிகர்கள்!
Ram Charan Injured: பெடி பட ஷூட்டிங்கில் விபத்து.. ராம்சரணுக்கு என்னாச்சு.. பதறிப்போன ரசிகர்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள், பிரச்சாரம்; எல்லாத்துலயும் எடப்பாடிதான் ஃபர்ஸ்ட்- எலக்‌ஷனில் எப்படி?
Edappadi Palanisamy: தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள், பிரச்சாரம்; எல்லாத்துலயும் எடப்பாடிதான் ஃபர்ஸ்ட்- எலக்‌ஷனில் எப்படி?
DMK vs AIADMK: அஞ்சும் அதிமுக? திமுக அமைச்சர்கள் தொகுதிகளை பாஜக, பாமக, அமமுகவுக்கு தள்ளிவிட்ட எடப்பாடி!
DMK vs AIADMK: அஞ்சும் அதிமுக? திமுக அமைச்சர்கள் தொகுதிகளை பாஜக, பாமக, அமமுகவுக்கு தள்ளிவிட்ட எடப்பாடி!
BJP: தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்
BJP: தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்
NDA Seat Sharing: பாஜக, பாமக, அமமுக எந்த எந்த தொகுதியில் போட்டி.! முழு பட்டியலையும் வெளியிட்ட இபிஎஸ்
பாஜக, பாமக, அமமுக எந்த எந்த தொகுதியில் போட்டி.! முழு பட்டியலையும் வெளியிட்ட இபிஎஸ்
Russia Crude Oil Import: சிறப்பான சம்பவம்; ரஷ்யாவிடம் இத்தனை கோடி பீப்பாய் எண்ணெய் இறக்குமதியா.? தட்டித் தூக்கிய இந்தியா
சிறப்பான சம்பவம்; ரஷ்யாவிடம் இத்தனை கோடி பீப்பாய் எண்ணெய் இறக்குமதியா.? தட்டித் தூக்கிய இந்தியா
Trump's Plan Iran Condition: ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
MK STALIN udhaya suriyan symbol : 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
Affordable KIA EV2 Car: 450 கிமீ ரேஞ்ச்.. மலிவு விலை; அசத்தலான அம்சங்களுடன் புதிய EV காரை களமிறக்கும் கியா; விலை என்ன.?
450 கிமீ ரேஞ்ச்.. மலிவு விலை; அசத்தலான அம்சங்களுடன் புதிய EV காரை களமிறக்கும் கியா; விலை என்ன.?
Embed widget