ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன திரைப்பிரபலங்கள்! களைக்கட்டும் சோஷியல் மீடியா!
நடிகர் தனுஷ், நல்ல ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் கிடைக்கட்டும் .. ஓம் நம சிவாயா என குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பட்டாசு வெடித்தும் , புத்தாடை அணிந்தும் தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திரைப் பிரபலங்களும் தங்களது ரசிகர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தி “ இந்த தீபாவளியை நாம் மன அமைதியோடும் அன்போடும் கொண்டாடுவோம்..இந்த கொண்டாட்டம் மூலம் அடுத்த வருடத்திற்கான நேர்மறை எண்ணத்தை எடுத்து செல்வோம்.அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
Let us celebrate this Deepavali with Love and Peace in our hearts! May we carry this festive cheer and positivity all through the year! Wishing a very Happy Deepavali to you and your loved ones! 😊
— Actor Karthi (@Karthi_Offl) November 4, 2021
அதேபோல நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..இந்த தீபாவளி உங்களுக்கு ஒளியையும் அமைதியையும் கொண்டு வரட்டும். நல்ல ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் கிடைக்கட்டும் .. ஓம் நம சிவாயா “ என தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
Wishing you all a very happy Diwali 🪔 may the festival of light bring lot of peace , good health and good luck. Om Namashivaya
— Dhanush (@dhanushkraja) November 4, 2021
அண்ணாத்த படத்தை ஒன் மேன் ஷோ என குறிப்பிட்டு , எங்களை எண்டர்டைமெண்ட் செய்வதற்கு நன்றி தலைவா ..ஒரு தலைவன் எப்போதும் தலைவாதான் என தெரிவித்த சிவகார்த்திகேயன் , அடுத்த ட்வீட்டில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
#Annaatthe one man show🔥🔥🔥Thank you thalaiva for entertaining us🙏🙏🙏Once a Thalaivar fan always a Thalaivar fan❤️❤️❤️
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 4, 2021
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்😊🙏❤️Have a happy and safe Diwali 🪔😊👍
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 4, 2021
நடிகர் விஜய் சேதுபதி தனது “யாதும் ஊரே யாவரும் கேளிர் “ படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
— Actor Vadivelu (@Vadiveluhere) November 4, 2021
#தீபாவளிநல்வாழ்த்துக்கள்
அதே போல நடிகர் வடிவேலுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் என அறியப்படும் பக்கத்திலிருந்து , வடிவேலு தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
— Actor Vadivelu (@Vadiveluhere) November 4, 2021
#தீபாவளிநல்வாழ்த்துக்கள்
இவர்கள் தவிர நடிகர் விஷால் , சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

