குடும்பத்தோட தியேட்டருக்கு போறீங்களா? இந்த 4 படத்துல எதுக்கு வேணும்னாலும் போங்க..!
ஞாயிற்றுக்கிழமையான இன்று குடும்பத்துடன் சென்று திரையரங்கில் ரசித்து பார்க்க 4 சிறந்த படங்களை கீழே காணலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்கள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் உள்ள திரையரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை என்றால் மக்கள் குடும்பத்துடன் வெளியில் செல்ல விரும்புவார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும் முதல் தேர்வாக திரையரங்கமே உள்ளது.
இந்த நிலையில், இந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் நீங்கள் சென்று பார்ப்பதற்கு தரமான படங்கள் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
1. டிடி நெக்ஸ்ட் லெவல்:
காமெடியனாக இருந்து கதாநாயகனாக உலா வரும் சந்தானத்தின் ஹாரர் வகை படமான தில்லுக்கு துட்டு படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி உள்ளது டிடி நெக்ஸ்ட் லெவல். சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீதிகா திவாரி நடித்துள்ளார். செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கவுதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆகியோரும் நடித்துள்ளனர். குழந்தைகளுடன் சென்று சிரித்து ரசிக்க இந்த படம் சிறந்த விருந்தாகும். இந்த படத்தை ப்ரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.
2.மாமன்:
தமிழ் சினிமா என்றென்றும் குடும்ப படங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. அந்த வகையில் குடும்பத்துடன் சென்று ரசித்து பார்க்க சூரி கதாநாயகனாக நடித்துள்ள மாமன் சிறந்த படமாக அமைந்துள்ளது. இந்த படமாக அமைந்துள்ளது. கணவன் - மனைவி, மாமன் - மருமகன் என உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி நடிகரில் இருந்து முற்றிலும் கதாநாயகன் பரிமாணத்திற்கு மாறிவிட்டார் சூரி என்பதற்கு இந்த படம் ஒரு சான்றாகும். இந்த படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
3.லெவன்:
காமெடி, குடும்ப படங்களுக்கு பதிலாக முழுக்க முழுக்க த்ரில்லர் படம் வேண்டும் என்று விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது லெவன் திரைப்படம். லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்துள்ளார். இரட்டையர்களை குறிவைத்து நடக்கும் கொலைகள், அவர்கள் யார்? கொலையாளி யார்? எதற்காக நடக்கிறது இந்த கொலைகள்? என்பதற்கு பரபரப்பான திரைக்கதையுடன் விடை சொல்கிறது லெவன். கிரைம் த்ரில்லர் விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாகும்.
4. மிஷன் இம்பாசிபிள்:
உலகம் முழுவதும் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் டாம் க்ரூஸ். நிஜ சாகசங்களை திரையில் அசால்டாக செய்யும் டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங். மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்காக மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய விருந்தாகும்.




















