Kim Kardashian : புகைப்படத்தில் தெரியும் மர்மமான பெண்ணின் நிழல்......கிம் கார்தாஷியனைச் சுற்றும் மர்மங்கள்?
ஹாலிவுட் பிரபல மாடலான கிம் கார்தாஷியன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் தெரியும் மர்மமான பெண்ணின் நிழல் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது
உலகளவில் மிகவும் பிரபலமானவர்களில் அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியனும் ஒருவர். இவருடைய சமூக வலைதள பக்கங்களை பல லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாவில் அதிகம் புழங்கும் ஆள் என்றால் உங்களுக்கு நிச்சயம் கிம் கர்தாஷியனைத் தெரியும். மாடல், அழகுசாதன பொருட்கள் விற்பனை, உள்ளாடை பிஸினஸ் என பல்வேறு பிஸினஸ்களில் தீவிரமாக இயங்கி வரும் கிம், இன்ஸ்டாவில் படு தீவிரமாக இயங்கி வருவார். இன்ஸ்டாவே அவருக்கு ஒரு பிஸினஸ்தான். ஏதேனும் விளம்பரம் தொடர்பான போஸ்ட் என்றாலே கோடிக்கணக்கில் சம்பாதிப்பார் கிம். அவருடைய உடலமைப்பே அவருக்கு பலம் என்பதுபோல போட்டோக்களையும் தொடர்ந்து பதிவிடுவார். இன்ஸ்டாவில் அவருக்கு தற்போது 324 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் உள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 32 கோடிக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்.
மர்ம பெண்ணின் நிழல்
அண்மையில் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்றை தனது இன்ஸ்டிகாரம் பக்கத்தில் பகிர்ந்த் கிம் தனது புகைப்படத்தில் தனக்கு பின்னார் ஒரு பெண்ணின் நிழல் உருவம் தெரிவதை சுட்டிக்காட்டி அது குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை தான் எடுத்தபோது தான் தனது வீட்டில் தனியாக இருந்ததாகவும் தற்போது இந்தப் புகைப்படத்தைப் பார்த்து தான் பீதியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
View this post on Instagram
கிம் கார்தாஷியனைத் தொடரும் மர்மங்கள்
முந்தையதாக கிம் கார்தஷியனைப்போல் மாறி அருவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
கிரிஸ்டினா ஆஷ்டன் கூர்கனி என்ற 34 வயது மாடல், கிம் கர்டாஷியன்போல மாற விரும்பி பல முகமாற்று அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டவர். இவருடைய இறப்பு, தவறான பிளாஸ்டிக் சர்ஜரியில் நிகழ்ந்திருக்கலாம் என கிரிஸ்டினாவின் குடும்பத்தாரின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. அவரது இறப்பு குறித்த உண்மை வெளிவரும்வரை காவல் துறையினர் தீவிர விசாரணையை நடத்த வேண்டும் என கிரிஸ்டனாவின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், கிரிஸ்டினாவின் இறப்பு தங்களால் தாங்கிக்கொள்ள முடியாததாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு முறை இந்த மாதிரியன சம்பவங்கள் நடக்கும்போது பிரச்சனைகளைத் தேடி கிம் செல்கிறாரா இல்லை பிரச்சனைகள் அவரைத் தேடி வருகிறதா என்று சந்தேகம் எழுகிறது.