மேலும் அறிய

Keerthy Suresh | நண்பர்களுடன் இணைந்து புதிய பிஸினஸ் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்! : அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்தான் ? !

யாரோ ஒருவருடைய பிராண்டுக்கான புரமோஷன் வேலைகளைதான் செய்து வருகிறார் என்று பார்த்தால், அது அவரது சொந்த பிசினஸ்

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அறிமுகமான காலக்கட்டத்தில் நடிக்கவே தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார் கீர்த்தி. ஆனால் பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு இவர் மீதான பிம்பம் அடியோடு மாறிவிட்டது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் மற்ற பிரபலங்களை போலவே சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் . இந்நிலையில் கீர்த்தி  தனது புதிய பிசினஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுட்டுள்ளார். முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ” நான் தேர்வு செய்யும் எல்லா காதாபாத்திரங்களும் என்னுள் ஒரு அங்கம்தான். நான் பயன்படுத்தும் பொருட்களும் இயற்கைக்கு முரணானதாக இருக்காது. முடிந்த வரையில் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் நடந்துக்கொள்கிறேன் என்று நம்புகிறேன். அப்படி முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த விஷயங்களோட கூடிய அறிவிப்போடு உங்களை விரைவில் சந்திக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

யாரோ ஒருவருடைய பிராண்டுக்கான புரமோஷன் வேலைகளைதான் செய்து வருகிறார் என்று பார்த்தால், அது அவரது சொந்த பிசினஸ். தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து ‘பூமித்ரா’ என்னும் இயற்கை அழகு பொருட்கள் வணிகத்தை தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர் “ இது முற்றிலும் இயற்கை பொருட்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இரசாயனம் இல்லாத செயற்கை நிறம் அல்லாத பொருட்கள் ”என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக தனது குழுவுடன் நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்தாராம். ஒரு வேளை இந்த பொருட்கள்தான் கீர்த்தியின் அழகு ரகசியமாக இருக்குமோ. 

View this post on Instagram
 
A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

கீர்த்தி சுரேஷ் தற்போது செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தை நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் ஆரண்யகாணடம் என்னும் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் . கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. அதில் கீர்த்தி மற்றும் செல்வராகவன் இருவரும் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருப்பதால் , படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நி்லையில் டப்பிங் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில்  திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ,தற்போது இல்லை என்பதால், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் எண்ணத்தில் உள்ளார்களாம் படக்குழு.

இதற்காக அமேசான் பிரைமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்டத்தில் இருக்கும் சாணிக்காயிதம் படத்தின் வேலைகள் முடிந்தவுடன் வெளியீட்டு விவரங்கள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Embed widget