மேலும் அறிய

Keerthi Suresh Playing Cricket | கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பும் கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ!

கீர்த்தி சுரேஷின் மொட்டை மாடி கிரிக்கெட் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு தென் இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. கேரளாவைச் சேர்ந்த கீர்த்தி இந்த கொரோனா காலத்தில் உடற்பயிற்சி, யோகா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் மொட்டை மாடி கிரிக்கெட் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். என்னுடைய அம்பயர் நைக் உடன் அழகான மாலை நேரம் என கீர்த்தி குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள நைக் வேறு யாருமல்ல. அவருடைய செல்ல நாய்க்குட்டி தான். அந்த வீடியோவில் ஓடி வந்து பவுலிங் போடும் கீர்த்தி அங்கு வைக்கப்பட்டுள்ள ஸ்டெம்புகளை சரியாக தகர்த்தெறிகிறார். இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் நன்றாக கிரிக்கெட் விளையாடுவதாக குறிப்பிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு நீங்கள்  ஏன் செல்லக்கூடாது? எனவும் ரசிகர்கள் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Keerthi Suresh Playing Cricket | கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பும் கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ!

கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகை மேனகா சுரேஷின் மகள் என்பது பலரும் அறிந்ததே. கீர்த்தியின் தந்தையும் ஒரு தயாரிப்பாளர். சினிமா குடும்பத்தில் பிறந்த கீர்த்திக்கும் சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் இருந்த நிலையில் 2000மாவது ஆண்டு தனது 8வது வயதில் Pilots என்ற மலையாள திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு மூன்று திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்

அதன் பிறகு மலையாளத்தில் அவர் சில சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகள் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்த கீர்த்தி, 2014ம் ஆண்டு பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் ஏ.எல். விஜயின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தில் பிரபல நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக களமிறங்கினார் கீர்த்தி. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரெமோ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. 2017ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படம் கீர்த்தியின் சினிமா அந்தஸ்தை உயர்த்தியது. 


Keerthi Suresh Playing Cricket | கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பும் கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ!

கடந்த 2018ம் ஆண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழக்கையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றது. அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இறுதியாக கீர்த்தி சுரேஷ் தமிழில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் வெளியான பென்குயின் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தே மற்றும் சாணி காகிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே...10 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சிம்பு நயன் கூட்டணி
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே...10 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சிம்பு நயன் கூட்டணி
Karthigai Deepam: ஸ்பாட்டிலே பறிபோன அருண் உயிர்! கதறி அழுத கார்த்திக்! சாமுண்டீஸ்வரி கதி இனி என்ன?
Karthigai Deepam: ஸ்பாட்டிலே பறிபோன அருண் உயிர்! கதறி அழுத கார்த்திக்! சாமுண்டீஸ்வரி கதி இனி என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
Embed widget