Suzhal 2 : ஜப்பானில் ட்ரெண்டாகி வரும் சுழல் 2...தமிழில் ஏன் ரசிகர்களை கவரவில்லை ?
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கதில் , ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சுழல் 2 வெப் சீரிஸ் தமிழில் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெறாத நிலையில் ஜப்பானில் ட்ரெண்டாகி வருகிறது

சுழல்
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் வெப் சீரிஸ் சுழல். முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், ‘கயல்’ சந்திரன், கௌரி ஜி கிஷன், சம்யுக்தா வயோலா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி, ரினி, ஸ்ரீஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், அஷ்வினி நம்பியார், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் இதில் நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். முந்தைய சீசன் பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது சீசனுக்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருந்தது. ஆனால் சீரிஸ் பெரியளவில் ரசிகர்களை திருபதி படுத்தவில்லை. முதல் சீசன் அளவிற்கு இல்லை என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
ஜப்பானில் ட்ரெண்டாகும் சுழல் 2
தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடன் என ஐந்து மொழிகளில் சுழல் 2 வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கு கிடைக்கவில்லை. ஆனான் ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளில் சுழல் 2 சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜப்பான் , மலேசியா , ஐக்கிய அரபு நாடுகளில் இந்த தொடர் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூரில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு அடுத்த சீசனை கேட்டு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
சுழல் 2 எப்படி இருக்கு
சுழல் சீசன் ஒன்று மற்றும் 2 இரண்டும் திருவிழாக்களை மைய கதைக்களமாக வைத்து உருவான தொடர் சுழல் 2 . இந்த திருவிழாவைச் சுற்றி நடக்கும் அரசியல் , ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு பின் இருக்கும் பின்னணி என விரிகிறது கதை. முதல் பாகத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவனை ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார். அவரை சிறையில் இருந்து மீட்க போராடுகிறார் வழக்கறிஞர் செல்லப்பா (லால்). செல்லப்பா தனது காட்டேஜ் வீட்டில் கொலை செய்யப்படுவதில் இருந்து தொடங்குகிறது சுழல் 2 . செல்லப்பாவை கொன்றதாக 8 பெண்கள் வந்து போலீஸில் சரணடைகிறார்கள். இந்த 8 பெண்கள் யார் , செல்லப்பாவிற்கு அவர்களுக்கும் என்ன தொடர்பு , போன்ற கேள்வியை நோக்கி நகர்கிறது தொடர். முந்தைய பாகத்தைப் போல் எழுத்தில் எந்த வித மாற்றமுல் இல்லை என்றாலும் முந்தைய சீசனில் இருந்த சீக்ரெட் இந்த சீசனில் இல்லாதது ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளது என சொல்லலாம்.





















