மேலும் அறிய

Thunivu: துணிவே துணை... துணிவு ரிலீஸை அறிவித்த தியேட்டர்... கும்பகோணத்திற்கு முதல் ஜாக்பாட்!

'துணிவு திரைப்படத்தை' காட்சிப்படுத்த தமிழ் நாட்டில் உள்ள திரையரங்கங்களை புக்கிங் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

 

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது. 'துணிவு திரைப்படத்தை' காட்சிப்படுத்த தமிழ் நாட்டில் உள்ள திரையரங்கங்களை புக்கிங் செய்ய தொடங்கியது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.  

 

Thunivu: துணிவே துணை... துணிவு ரிலீஸை அறிவித்த தியேட்டர்... கும்பகோணத்திற்கு முதல் ஜாக்பாட்!

 

காசி கலையரங்கத்தில் 'துணிவு' :
 
அந்த வகையில் லேட்டஸ்ட் அப்டேட் என்வென்றால் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமான தியேட்டரான காசி கலையரங்கத்தில் 'துணிவு;' திரைப்படம் காட்சிப்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பது தான் அந்த இனிய செய்தி. துணிவே துணை! 'துணிவு' திரைப்படத்துக்கு ஆதரவாக இருந்த காசி கலையரங்கத்தின் உரிமையாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளது 'துணிவு' படக்குழு. இந்த தகவல் ரசிகர்களுக்கு குறிப்பாக கும்பகோணம் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

மூவரின் கூட்டணி என்றுமே வெற்றி கூட்டணி :    


ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த மூவரின் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இப்படம் பொங்கல் ரிலீஸாக உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் அதுவும் பொங்கல் ரிலீஸாக வெளியாக உள்ளது என்பதால் பரபரப்போடு காணப்படுகிறார்கள் திரை ரசிகர்கள். துணிவு மற்றும் வாரிசு இந்த இரு படங்களையும் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'சில்லா சில்லா' பாடல் சமீபத்தில் வெளியாகி ஏரளமான வியூஸ் பெற்று சூப்பர் ஹிட் பாடலாக ட்ரெண்டிங் பிளே லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. 

 

 

மும்மரமாக நடைபெறும் பணிகள் :

துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் ஜோடியாக நடித்துள்ளார் மலையாள நடிகையான மஞ்சு வாரியர். மேலும் இவர்களுடன் சமுத்திரகனி, ஜான் கோக்கன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். துணிவு படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ்காக மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் திரை ரசிகர்கள்.  

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget