Vaa Vaathiyaar Teaser : மஜாப்பா மஜாப்பா....கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியானது
Vaa Vaathiyaar Teaser : நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது
கார்த்தி
கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கார்த்தி தற்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது மெய்யழகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்தபடியாக நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்' படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. சூது கவ்வும் , காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிக பரப்பை உருவாக்கி நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். க்ரித்தி ஷெட்டி , ராஜ்கிரண் , சத்யராஜ் மற்றும் ஜி.எம் சுந்த உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். வா வாத்தியார் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வா வாத்தியார் டீசர்
Sparkle up and Celebrate the Carnival of Colorful Entertainer! ✨🥳@Karthi_Offl's #VaaVaathiyaarTeaser OUT NOW
— Studio Green (@StudioGreen2) November 13, 2024
🔗https://t.co/9tQMgs2sZl
A #NalanKumarasamy Entertainer
A @Music_Santhosh Musical #VaaVaathiyaar#வாவாத்தியார்#StudioGreen @gnanavelraja007 @IamKrithiShetty… pic.twitter.com/UCczUckKs1
கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் வா வாத்தியார். நலன் கார்த்தி காம்போவில் வா வாத்தியார் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது தற்போது வெளியாகியுள்ள படத்தின் டீசர். டீசரின் தொடக்கத்தில் சீரியஸான போலீஸாக வருகிறார் கார்த்தி. அப்புறம் தான் தெரிகிறது இது சீரியஸ் போலீஸ் இல்லை சிரிப்பு போலீஸ் என்று. வசனமே இல்லாமல் சந்தோஷ் நாராயணனின் செம மஜாவான பின்னணி இசையுடன் தொடரும் இந்த டீசர் பல்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. எந்த மாதிரியா ஒரு கதைக்களமாக இப்படம் இருக்கும் என்று யூகிக்கவே முடியவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுவம் ஒன்று காத்திருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்