‛இருக்கிற பிரச்னை போதாதுனு கரீனா கபூர் செய்த வேலை’ சின்னாபின்னமான ‛லால் சிங் சத்தா’
Kareena Kapoor : "இந்த படத்தை யாரும் புறக்கணிக்காதீர்கள். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் 250 பேருக்கும் மேல் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். இந்த படத்திற்கு உங்களின் ஆதரவு தேவை " கரீனா வேண்டுகோள்
அமீர் கான் - கரீனா கபூர் இணைந்து நடித்த "லால் சிங் சத்தா" திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது இப்படம்.
கோபமான கரீனா :
"லால் சிங்க் சத்தா" படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் நாயகி கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவரிடம் இப்படம் குறித்த பல கேள்விகள் அடுக்கடுக்காக கேட்கப்பட்டது. தொடர்ந்து பல விதமாக கேட்டகப்பட்ட கேள்விகளால் ஆத்திரமடைந்த கரீனா ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காமல் "உங்களை யாரும் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. எங்களது படத்தை நீங்கள் பார்க்க வேண்டாம். நீங்கள் படம் பார்க்காமல் போவதால் ஒன்றும் ஆகிவிட போவதில்லை" என்று மிகவும் கோபமாக சொல்லிவிட்டாராம் கரீனா. இந்த கருத்துக்கு ரசிகர்களும் திரையுலத்தினரும் கண்டனம் தெரிவித்தனர்.
View this post on Instagram
கரீனாவின் வேறுபட்ட கருத்து :
பல ரசிகர்கள் கோபமடைந்து "லால் சிங் சத்தா" திரைப்படத்தை புறக்கணிக்க போவதாக தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத கரீனாவிற்கு இந்த விமர்சனங்கள் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழ்நிலையை சரி செய்வதற்காக தற்போது புதிதாக ஒரு வீடியோவை பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். "இந்த படத்தை யாரும் புறக்கணிக்காதீர்கள். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் 250 பேருக்கும் மேல் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். அவர்களுக்காக இந்த படத்திற்கு உங்களின் ஆதரவு தேவை " என்று கேட்டுள்ளார்.
View this post on Instagram
நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட கரீனா:
கரீனா கபூரின் இந்த இரண்டு வேறுபட்ட கருத்துக்களை மீம்ஸ்கள் மற்றும் கமெண்ட்களின் மூலம் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். எதற்கு இந்த வேண்டாத வேலை. தேவையில்லாமல் வார்த்தையை கொட்டிவிட்டு இப்படி தவிப்பது தேவையா என கரீனாவின் சக நடிகர்களும் கேலி செய்து வருவதாக தகவல் வெளியாயுள்ளது.