Kareena Kapoor : என்ன நெனச்சிட்டு இருக்கீங்க.. நான் என்ன மெஷினா? : வதந்தி பரப்புபவர்களை விளாசிய கரீனா கபூர்
கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்று கிளம்பிய வதந்திகளால் கடுப்பான அவர் நான் என்ன மெஷினா அடிக்கடி குழந்தை பெற்றுக் கொள்வதற்கு என்று காட்டமாக வினவியுள்ளார்.
கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்று கிளம்பிய வதந்திகளால் கடுப்பான அவர் நான் என்ன மெஷினா அடிக்கடி குழந்தை பெற்றுக் கொள்வதற்கு என்று காட்டமாக வினவியுள்ளார்.
கரீனா கபூர் – சைஃப் அலிகான் ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2016-ஆம் ஆண்டில் தைமூர் அலி கான் என்ற முதல் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தைக்கு ஜெஹாங்கிர் அலி கான் என்ற பெயரை சூட்டி மகிழந்தனர்.
ஆனால், இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த தைமூர் பெயரையும், இந்தியாவை ஆண்ட ஜெஹாங்கிர் பெயரை வைத்ததற்கு சில மதவாதிகளும், பிரிவினைவாதிகளும் தொடர்ந்து எதிர்ப்பு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் கரீனா கபூர் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வடக்கத்தி ஊடகம் ஒன்று கரீனாவிடம் பேட்டி கண்டுள்ளது.
அந்தப் பேட்டி பின்வருமாறு:
கரீனா கபூரை நாங்கள் (வடக்கத்தி ஊடக நிருபர்கள்) பேட்டி எடுக்கச் சென்றோம். அவர், அவருடைய பிரமாண்டமான சொகுசு வேனில் இருந்தார். எந்தவித மேக்கப்பும் இல்லை. அலங்கார ஆடைகள் இல்லை. சர்வசாதாரணமாக இருந்தார். அவரிடம் இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்திருந்த புகைப்படம் பற்றியும் அதைப் பற்றி எழுந்துள்ள விமர்சனங்கள் பற்றியும் கேட்டோம். அதற்கு அவர், நான் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். காரணம் அதில் நிறைய படங்களைப் பகிர முடிகிறது, எனக்கு அது பிடித்திருக்கிறது. அதன் நோக்கத்தினை அறிந்து நான் அதை பயன்படுத்துகிறேன். எனது பக்கங்களில் இயல்பான படங்களைப் பகிர்கிறேன். அதனால் எனது இன்ஸ்டா பக்கம் அழகானதாக, இயல்பானதாக, உண்மையானதாக இருக்கிறது. அதில் குடும்பத்தினரையும் அவ்வப்போது பார்ப்பீர்கள். அதைத் தாண்டி வேறெதுவும் இல்லை. நான் சினிமாவில் இருந்தாலும் எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது தானே. நான் என்னால் முடிந்ததை செய்கிறேன்.
என்னுடைய ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தை வைத்துக் கொண்டு நான் கர்ப்பமாக இருப்பதாகப் பேசுகிறார்கள். அடக் கடவுளே என்று அந்த வதந்திகளைப் பார்த்து நானே அசந்து போயுள்ளேன். நான் விடுமுறையில் இருந்தபோது அந்தப் படத்தை எடுத்தேன். எனக்கே தெரியாது அப்போதெல்லாம் நான் எத்தனை பீட்சா சாப்பிட்டேன் என்று. ஒருவேளை நான் சாப்பிட்ட ஒயின் மற்றும் பாஸ்தாவால் என் வயிறு அப்படி இருந்ததோ என்னவோ?
இங்கே ஒரு பெண் உடல் எடை அதிகமானாலே பிரச்சனை தான். உடனே அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்லிவிடுகிறார்கள். அடிக்கடி குழந்தை பெற்றுக்கொள்ள நான் என்ன மெஷினா? நான் கர்ப்பம் தரிக்க வேண்டுமா என்று முடிவு செய்யும் சாய்ஸையாவது என்னிடம் கொடுங்களேன் என்று நெட்டிசன்களுக்கு கோரிக்கை வைத்தார்.
கரீனா கபூர் தற்போது அமீர் கானுடன் நடித்த லால் சிங் சட்டா பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இதுதவிர சுஜோ கோஷ் இயக்கத்தில் ஒரு படமும், ரியா கபூருடன் ஒரு படம், ஹன்ஸால் மேத்தாவுடன் ஒரு படம் என நிறைய படங்கள் அவர் வசம் உள்ளன.