காதலி தூங்கும் அழகை வர்ணித்து எம்ஜிஆர்-க்கு கண்ணதாசன் எழுதிய பாடல் தான் விஜய்யின் ஹிட் பாடல் உருவாக காரணம்!
காதலி தூங்கும் அழகை கண்ணதாசன் வர்ணித்து எழுதிய பாடலை தழுவி எழுதப்பட்ட பாடல் தான் தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
காதலிப்பவர்களால் மட்டுமே அந்த காதல் கொடுக்கும் அற்புதமான உணர்வை ரசிக்க முடியும். காதல் நறுமணம் மனதில் கமழ துவங்கி விட்டால், காதலன் மெய்மறந்து தன் காதலி செய்வதை ரசிப்பதும், காதலி தன் காதலன் செய்யும் குறும்புகளை ரசிப்பதும் புதுமையான விஷயம் இல்லை. அனால் காதல் அரும்பிய தருணத்தில் காதலன் - காதலிக்கு அவர்கள் செய்வது அனைத்தும் புதுமையாக தான் தோன்றும். அது காதலுக்கே உரிய தனி சக்தி எனலாம்.
இது இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல, இந்த பூமியில் உயிர் ஜனித்ததில் இருந்தே அன்பும் - காதலும் உருவாகி விட்டது. ஆனால் காதலை மக்களிடம் புதுமையான அனுபவதோ கொண்டுவந்து சேர்ந்த பெருமை திரைப்படங்களை தான் சேரும். திரையில் வரும் காதல் காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது இயக்குனரும் - நடிகர்களும் என்றால், படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கு வார்த்தைகள் மூலம் உயிர்கொடுப்பது பாடலாசிரியர்கள் தான்.
அப்படிப்பட்ட ஒரு பாடலை தான் கண்ணதாசன் எம்ஜிஆருக்காக எழுதியிருக்கிறார். அது என்ன பாடல், படம் என்ன என்பது பற்றி முழுமையாக பார்க்கலாமா? சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன்னதாக எம்ஜிஆர் துணை நடிகராக நடித்த படங்கள் தான் அதிகம். அதன் பிறகு தான் எம்ஜிஆர் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். எம்ஜிஆர் ஹீரோவாக நடித்து வெளியான படம் தான் மகாதேவி. இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக சாவித்ரி நடித்திருந்தார். மேலும், பிஎஸ் வீரப்பா, ஜேபி சந்திரபாபு, டிபி முத்துலட்சுமி, ஏ கருணாநிதி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் டிகே ராமமூர்த்தி இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தனர்.
இந்தப் படத்தில் மட்டும் 11 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. அதில், 4 பாடல்களுக்கு கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்தார். அதில் சிங்கார புன்னகை, கண்மூடும் வேளையிலும், மானம் ஒன்றே பெரிதென்ன, சேவை செய்வதே ஆனந்தம் ஆகிய பாடல்களுக்கு கண்ணதாசன் பாடல் வரிகள் எழுதியிருந்தார். இதில் கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே என்ற பாடலை பி சுசீலா மற்றும் ஏம் எம் ராஜா இருவரும் இணைந்து பாடியிருந்தனர்.
இந்தப் பாடலானது காதலி தூங்கிக் கொண்டிருக்கும் போது காதலன் அவளது அழகை வர்ணிக்கும் வகையில் எழுதப்பட்ட பாடல். காதலியும் பதிலுக்கு பூனை போல் வந்து காதலன் தன்னை ரகசியமாக சந்தித்து போவதாக ஊடலும் இந்த பாடல் இடம்பெற்றிருக்கும். காதலன் காதலி இருவரும், இந்த உலகத்தின் இருவர் மட்டுமே உள்ளதாக எண்ணி, பாடியிருப்பார்கள். இப்படிப்பட்ட பாடலை காலத்திற்கு அப்படியே உருவி கொஞ்சம் மாற்றி தளபதி விஜய்யின் நெஞ்சினிலே படத்தில் இடம்பெற்ற பாடலை பாடலரிசிர்யர் ஜெயராம் "உன் தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா என்ற பாடலை எழுதியதாக கூறியுள்ளார்.