Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Kanguva Twitter Review in Tamil : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்களைப் பார்க்கலாம்
கங்குவா விமர்சனம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இன்று திரையரஙகுகளில் வெளியாகி இருக்கிறது. ரூ 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கங்குவா முதல் பாதி எப்படி
சூர்யாவுக்கு ஸ்பெஷல் டைட்டில் கார்டுடன் தொடங்கி செம ஸ்டைலான இன் ட்ரொவுடன் தொடங்குகிறது கங்குவா. படத்தை சூர்யா ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்துகிறார். இடையிடையில் திரைக்கதையில் சின்ன ஓட்டைகள் தெரிந்தாலும் படத்தில் ஒரு நல்ல எமோஷனல் டச் இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இடைவெளி காட்சி ஒரு சூர்யா மற்றும் பாபி தியோலுக்கு இடையில் சூப்பராக அமைந்துள்ளது. தேவிஸ்ரீ பிரசாதின் பின்னணி இசை படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
#Kanguva First Half - Quite Decent & Holds well so Far🤝
— AmuthaBharathi (@CinemaWithAB) November 14, 2024
- What a screen presence of #Suriya & withholding as one man show in both timelines 🫡🔥
- Present portions were entertaining at parts with Fun Angle & connects emotionally with the Kid character 👌
- Lack of story arc &… pic.twitter.com/QuwEgOm3QQ
கங்குவா இரண்டாம் பாதி
பிரம்மாண்டமாக படம் எடுக்கப்பட்டிருந்தாலும் திரைக்கதையில் பல சிக்கல் இருப்பதாகவும் கதாபாத்திரங்கள் மேலோட்டமாக வடிவமைக்கப்பட்டிருப்பது படத்திற்கு பெரிய குறையாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரம்மாண்டமான கதைக்களம் இருந்து அதை இயக்குநர் சரியாக கையாளத் தவறியுள்ளார் என்றும் முதல் பாதி திரைக்கதையில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லாமல் போய்விடுகிறது என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
#Kanguva is a fantasy action film with promising potential, but the execution falls short. The first half tests patience with a confusing narrative and lack of engaging storytelling, despite Suriya’s impressive look and strong makeup work. Good production values and a few moments… pic.twitter.com/jiTqiz2QJT
— Vishnu Reviews (@VishnuR51492912) November 14, 2024
ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.