Kangana Ranaut : “பெண்கள் விரும்பிய உடையை அணியலாம்; இதில் யாருக்கும் உரிமை இல்லை ” - கங்கனா
“பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் ” என கூறி பெண்களுக்கு தன் ஆதரவை பாலிவுட் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்
பாலிவுட் நடிகை கங்கனா, பொதுவாகவே சோஷியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருப்பார். இவரின் நடிப்பு திறனுக்கு புகழ் பெற்று விளங்கினாலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். சமூகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும், தன் கருத்தினை முதலில் வெளிப்படுத்தும் ஆட்களில் இவரும் ஒருவர். பெண்கள் சுதந்திரத்திற்கு குரல் கொடுக்கும் வகையில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், வெள்ளை ஆடை அணிந்த கங்கனா “ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும், எதை அணிய கூடாது என்பதை முடிவு செய்வது அவரின் தனிப்பட்ட விஷயம். இதுகுறித்து, மற்றவர்கள் யாரும் அவர்களின் கருத்தை சொல்லக்கூடாது.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். “நான் என் கருத்தை வெளிப்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன். இப்போது நான் அலுவலகத்திற்கு செல்கிறேன். பாய்.” என்றும் தெரிவித்துக்கொண்டார்.
கங்கனா நடிப்பில் வெளியாகும் படங்கள் :
கங்கனாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான, மணிகர்னிகா ஃபிலிம்ஸ், முதன் முதலாக “திக்கு வெட்ஸ் ஷெரு”என்ற படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கங்கனாவுடன் நவாசுதீன் சித்திக், மற்றும் அவ்னீத் கவுர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படமானது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும்.இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோ பிக் படமான தலைவியில் நடித்த இவர், முன்னாள் பிரதமர் பயோ பிக் படமான எமர்ஜென்சியில் நடித்து வருகிறார். மணிகர்னிகா படத்தில் ஜான்சி ராணி வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார். இதனை தொடர்ந்தே இவருக்கு, சுயசரிதை கதைக்கொண்ட படங்கள் அவரின் வீட்டு கதவை தட்டியது என்றே சொல்லலாம். இதற்கு முன்பு, தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை தாம் தூம் படத்தில் பார்த்திருப்பர். இந்த படத்தில் வரும் “அன்பே என் அன்பே” என்ற பாடல் ஹிட்டாகியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : PathuThala Silambarasan: மாஸ் ப்ளஸ் கிளாஸ்.. ‘பத்துதல’ கர்நாடக படப்பிடிப்பு நிறைவு.. வைரலாகும் சிலம்பரசனின் புகைப்படங்கள்!